தெற்கத்தி கலைக்கூடம் தயாரிக்க பாரதிராஜா இயக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர். ஒரே நேரத்தில் தமிழ், இந்தி மொழிகளில் தயாராகியிருக்கிறது படம். இந்தியில் பெயர், சினிமா.
இந்திப் படம் பாரதிராஜாவுக்கு புதிதல்ல. ஏற்கனவே சிவப்பு ரோஜாவை ரீ-மேக் செய்துள்ளார். பாரதிராஜா தயவில் இரண்டு திறமைசாலிகள் பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்கள்.
webdunia photo
WD
ஒருவர் நானா படேகர், இன்னொருவர் ஹிமேஷ் ரேஷ்மயா. தசாவதாரம் முந்திக் கொண்டாலும் ஹிமேஷ் இசையமைத்த முதல் படம் பொம்மலாட்டம்.
நானா படேகர் சினிமா இயக்குனராக நடித்துள்ளார்.
ரியல் லைஃப்புக்கும், ரீல் லைஃப்புக்கும் இடையில் ஏற்படும் குழப்பம் இதில் சொல்லப்பட்டிருக்கிறது, நானா படேகர் கதாபாத்திரத்தின் மூலமாக.
நடிகையாக வருகிறாராம் காஜல் அகர்வால்.
ஒரு கொலையும், அதை சுற்றி நடக்கும் விசாரணையுமே பொம்மலாட்டத்தின் மையகரு.
கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரதிராஜா இயக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் என்பதால் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு.