கல்லுக்குள் ஈரம் - முன்னோட்டம்!

திங்கள், 7 ஜூலை 2008 (13:24 IST)
ரிஷி (ரிச்சர்ட்), கோபிகா நடிப்பில் வெளிவரயிருக்கும் படம் கல்லுக்குள் ஈரம். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கல்லுக்குள் ஈரத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஒரு மாணவியை மாணவனும், தாதாவும் காதலிக்கிறார்கள். மாணவிக்கு தாதா மீது வெறுப்பு. தாதாவோ மாணவி மீதுள்ள மையலில் அவளை கடத்தி வந்து தனிமைச் சிறையில் அடைக்கிறான். அந்த நாட்களில் மாணவிக்கு மாணவன் மீதுள்ள காதலை உணர்ந்து கொள்ளும் தாதா, அவளை காதலனுடன் சேர்த்து வைக்கிறான்.

இதில் மாணவியாக கோபிகா, மாணவனாக ரிஷி, தாதாவாக சுமன் நடித்துள்ளனர்.

படம் குறித்து மேலும்...

செஞ்சுரி ·பிலிம் இன்டர்நேஷனல் ஜெபா படத்தை தயாரித்துள்ளார்.

படத்தை இயக்கியிருப்பவர் கே.எஸ். லிங்கன்.

ஹைதராபாத், காஷ்மீர், புதுச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.

செந்தில், பானுசந்தர், முத்துக்காளை, ரேகா, மூமைத்கான், அபிநயஸ்ரீ ஆகியோரும் படத்தில் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்