கே.ஆர்.ஜி. நீண்ட இடைவெளிக்குப் பின் தயாரிக்கும் படம் குரு என் ஆளு. ஷாருக்கான் நடித்த எஸ் பாஸின் ரீ-மேக்கான இதை இயக்குகிறவர் செல்வா.
அப்பாஸ் கம்பெனி எம்.டி.. அவரது மனைவி பிருந்தா பரேக். அப்பாஸ் கம்பெனியில் வேலை பார்ப்பவர் மாதவன். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் மம்தா மாதவனின் காதலி.
அப்பாசுக்கு மம்தா மீது மோகம். மாதவனுக்கு அப்பாஸின் எம்.டி. நாற்காலி மீது மோகம். மம்தாவோ நினைத்ததை அடைய எதையும் துறக்க தயாராக இருப்பவர்.
வில்லங்கமான இந்தக் கதைக்கு ஸ்ரீகாந்த் தேவா மியூசிக். எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, மனோபாலா ஆகியோரும் படத்தில் உண்டு.
படம் குறித்து...
மாதவன், மம்தா இடம்பெற்ற பாடலை ஏவி.எம்.-ல் அரங்கு அமைத்து எடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்த், ஆஸ்ட்ரியாவிலும் பாடல் காட்சிகளை எடுத்துள்ளனர்.
ஆசன ஆண்டியப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விவேக்.
தான் நடித்த வேடத்திற்கு ஹாருக் கான் மாதவனை ரெகமண்ட் செய்ததாக கூறுகிறார் இயக்குனர் செல்வா.