முதல்வர் கருணாநிதி சாரப்பள்ளம் சாமுண்டி என்ற பெயரில் எழுதிய சரித்திர கதையே உளியின் ஓசையாகியிருக்கிறது. படத்தை இயக்கியிருக்கும் இளவேனில் பத்திரிக்கையாளர், கவிஞர், எழுத்தாளர், எல்லாவற்றிற்கும் மேல் முதல்வரின் நண்பர்.
சிற்பியின் காதலே கதை. வினித், கீர்த்தி சாவ்லா, அக்சயா பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் மகியின் கைவண்ணத்தில் அமைத்த அரங்கில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
படம் குறித்து...
ஒரு பாடலை முதல்வர் கருணாநிதி எழுதியுள்ளார்.
இளையராஜா இசை. பி. கண்ணன் கேமரா, சுரேஷ் அர்ஸ் எடிட்டிங்.
சூப்பர் சுப்பராயனின் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாம்.
என். ஜெயமுருகன் வழங்க, ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.பி. முருகேசன் தயாரித்துள்ளார்.
எனது கதைகளிலேயே சிறப்பாக உருவாக்கப்பட்ட திரைப்படம் என முதல்வர் உளியின் ஓசையை சிலாக்கிறார்.