தீ - முன்னோட்டம்!

வெள்ளி, 16 மே 2008 (18:09 IST)
webdunia photoWD
ஸ்ரீமூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் தீ. இதுவரை தாதாவாக படங்களில் தலை கா‌ட்டிய சுந்தர் சி, இதில் கஞ்சி போட்ட காக்கி சட்டையுடன் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார். சண்டயில் சுந்தர் சி-யின் ஜோடியாக நடித்த ராகிணிதான் இதிலும்.

அரசியல்வாதிகளால் பந்தாடப்படும் சுந்தர் சி, அவர்களின் கொட்டத்தை அடக்க சாக்கடையில் ஸாரி, அரசியலில் குதிக்கிறார். அவருக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் மாளவிகா.

சாயாஜி ஷிண்டே, மனோஜ் கே. ஜெயன், தலைவாசல் விஜய் இவர்களுடன் தேனிசைத் தென்றல் தேவாவும் ஒரு குட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தைப் பற்றி மேலும் தகவல்கள்...

போலீஸ் வேடத்துக்காக எக்ஸ்ட்ரா எக்சர்சைஸ் செய்துள்ளார் சுந்தர் சி.

சின்ன கேரக்டரில் வந்தாலும் 'சிக்'கென்று ஒரு ஆட்டம் மாளவிகாவுக்கு உண்டு.

காமெடி ஏரியாவை கவ‌‌ர் செய்பவர் விவேக்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் எழுதியிருப்பவர் யுகபாரதி.

ஒளிப்பதிவு டி. சங்கர், படத்தை இயக்குகிறவர் ஜி. கிச்சா.

வெப்துனியாவைப் படிக்கவும்