தெற்கத்தி கலைக்கூடம் தயாரித்திருக்கும் படம் பொம்மலாட்டம். பாரதிராஜா இயக்குனர். இதே பாடம் ஹிந்தியில் சினிமா என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாராகியிருக்கிறது. இரண்டு மொழிகளிலும் நடித்திருப்பவர்கள் ஒருவரே!
பொம்மலாட்டம் மூலம் நானா படேகர் தமிழில் அறிமுகமாகிறார். அவர்தான் ஹீரோ. இன்னொரு ஹீரோ அர்ஜுன். இரண்டு ஹீரோயின்கள். காஜல் அகர்வால்¨, ருக்மணி. படத்துக்கு இசை ஹிமேஷ் ரேஷமய்யா. இந்தியில் பிரபலமாகயிருக்கும் ஹீமேஷ¤க்கு பொம்மலாட்டம் முதல் தமிழ்ப் படம்.
படத்தைக் குறித்து...
மருத்துவர்களான பாரதிராஜாவின் இரு நண்பர்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
பெர்லினில் திரையிடப்பட்ட இப்படத்தின் திரைக்கதையை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்க தேர்வு செய்துள்ளனர்.
நானா படேகர் சினிமா இயக்குனராக வருகிறார்.
ஒரு கொலையின் பின்னணியில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் பாரதிராஜா.
அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
ஹிமேஷ் ரேஷமய்யாவின் இசைக்கு சினேகன், தேன்மொழி தாஸ், விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர்.
படத்துக்கு பின்னணி இசை அமைத்திருப்பவர் பரத் ஹன்னா.