அறுவடை!

வியாழன், 20 மார்ச் 2008 (20:16 IST)
webdunia photoWD
பங்கஜ் புரொடக்சன் ஹென்றி இரு மொழிகளில் தயாரிக்கும் படம் அறுவடை. மலையாளத்தில் வந்தேமாதரம் என்ற பெயரில் வெளியாகிறது. பெயரைக் கேட்டாலே கதையை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

மாலிக் என்ற பெயரில் தீவிரவாதிகள் குழு ஒன்று தென்னிந்தியாவில் ஊடுருவுகிறது. அவர்களின் சதித் திட்டங்களை உளவுத்துறை அதிகாரி, போலீஸ் அதிகாரியுடன் துணையுடன் முறியடிக்கிறார். ஆபரேஷன் மாலிக் என்ற இந்த களையெடுக்கும் வேலைதான் கதையின் பிரதானப் பகுதி.

கோபி கிருஷ்ணன் என்ற உளவுத்துறை உயரதிகாரியாக மம்முட்டி. பூ கேட்டால் வேரோடு பெயர்த்து வரும் போலீஸ் அதிகாரி அன்வர் ுசைனாக அர்ஜுன். நந்தினியாக சினேகா. இவர்கள் தவிர ராஜ்கபூர், மாளவிகா, ரியாஸ் கான், விஜயகுமார், மும்தாஜ், ராஜன் பி. தேவ் ஆகியோரும் உண்டு.

படத்தைப் பற்றி...

T. அரவிந்த் படத்தை இயக்கியிரு'க்கிறார். அடுத்து என்ன என்பதை ஊகிக்க முடியாத திரைக்கதை.

விமானத்தில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி படத்தின் ஹைலைட்களில் ஒன்று. சண்டைப் பயிற்சி அனல் அரசு.

வெற்றியும் ராஜேஷ் வைத்யாவும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

மம்முட்டியின் ஜோடி சினேகா. முதல் முறையாக விமான பைலட்டாக நடித்துள்ளார்.

அர்ஜுனின் ஜோடி மம்தா மோகன்தாஸ்.

வித்யாசாகரின் இசையில் வைரமுத்து, பா. விஜய், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு சண்டைக் காட்சியை எடுத்துள்ளார்கள்.

பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னை, கொச்சி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம், இளையான்குடி, தேங்காப்பட்டணம் பகுதிகளில் நடத்தப்பட்டது.

படத்தின் மொத்த பட்ஜெட் 14 கோடி ரூபாய்!

வெப்துனியாவைப் படிக்கவும்