செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (20:07 IST)
நேமிசந்த் ஜபக் நிறுவனம் சார்பாக வி. இத்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் படம் 'அஞ்சாதே'. மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் இது.
இரண்டு நண்பர்கள் சந்தர்ப்ப வசத்தால் இருவேறு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களைப் பற்றிய கதையே அஞ்சாதே.
நரேன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரசன்னா வில்லன். நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார். மலையாள நடிகர் அஜ்மல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மீசையில்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பாண்டியராஜன்.
இவர்களைத் தவிர பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்துள்ளனர். நாயகி, விஜயலட்சுமி. கத்தாள கண்ணாலே பாடலுக்கு ஸ்னிக்தா ஆடியிருக்கிறார்.
படத்துக்கு இசை சுந்தர் சி.பாபு. ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி. சண்டைப் பயிற்சி ஆக்ஷன் பிரகாஷ். எடிட்டிங் சடகோபன் ரமேஷ். நடனம் தினா, பாபி.
கபிலன், பிரியன் பாடல்களை எழுதியுள்ளனர். பாரதியாரின் பாடல் ஒன்றும் படத்தில் இடம்பெறுகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதுடன் ஒரு பாடலும் பாடியிருக்கிறார் மிஷ்கின்.