ரஷ்யாவில் படமான தாம்தூம்

புதன், 9 ஜனவரி 2008 (16:38 IST)
webdunia photoWD
கதையின் பெரும்பகுதி வெளிநாட்டில் நடக்க பாடல் காட்சிகளுக்காக மட்டும் நம்மூர் வந்திருக்கும் படக்குழு தாம் தூம் படக்குழுவினர்தான்.

படக்கதையின் களம் ரஷ்யா. நம் பொள்ளாச்சி சென்னையும் கொஞ்சம் வருகிறது.

ஒரு மெடிக்கல் கான்பரன்¤க்காக மாஸ்கோவுக்கு ஐந்து நாள் பயணமாகச் செல்கிறார் ஜெயம் ரவி. ரஷ்யாவில் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. தாய் நாடு திரும்ப வேண்டிய ரவியை சூழ்நிலை துரத்த ஓடுகிறார். ஓடிக் கொண்டே இருக்கிறார். மொழி தெரியாத தேசத்தில் அவர் படும் திண்டாட்டமும் ஓட்டமும் தான் கதை. இந்த ஒரு வரிக்கதையை பட்டுப்பூச்சி நூல் கூடு கட்டுவதைப் போல இழை பின்னி திரைக்கதை நெய்திருக்கிறார் இயக்குநர் ஜீவா.

இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். ஆனால் சாதாரண ஆக்ஷன் இல்லாமல் எமோஷனல் ஆக்ஷன் என்ற மற்றொரு பரிமாணத்தை தரும் படம்.

சென்னையில் இருந்து ரஷ்யா மாஸ்கோ செல்லும் கதை மீண்டும் சென்னையில் வந்து முடிகிறது. இடையில் பிளாஷ் பேக்கில் பொள்ளாச்சி. சென்னைவாசி ரவி கல்லூரி மாணவர், மாஸ்கோவில் செட்டிலாகியிருக்கும் லட்சுமிராய் வக்வீல், பொள்ளாச்சியில் வசிக்கும் கங்கனா படித்த துறுதுறு குறும்புக்காரப் பெண் ஆகியோர் பிரதான பாத்திரம்.

ஜெயம் ரவியின் அப்பாவாக நிழல்கள் ரவி, அம்மாவாக ஜானகி சபேஷ் மற்றும் அனுஹாசன், சேத்தன், மகாதேவன், போஸ், ஸ்ரீநாத், ரஷ்ய நடிகை மரியா நடிக்கிறார்கள்.

மேலும் முக்கியமான நடிகர் ஒருவர் நடித்துள்ளார். அவர் யார் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.

webdunia photoWD
ஆங்கில மொழி நுழையாத உலகமொன்று இருக்கிறதை படம் பார்ப்பவர்கள் உணர முடியும். அதை காட்டவே ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் காட்சிகளில் ரவி துணிச்சலுடன் நடித்துள்ளார்.

ரஷ்யாவில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால் இரவு 12 மணி ஆனாலும் இரவாகத் தெரியாதாம். நல்ல வெளிச்சமாக இருக்குமாம்.

இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் - ஜீவா
பாடல்கள் - பா விஜய், நா. முத்துக்குமார்
படத் தொகுப்பு - விடி விஜயன்
கலை- தோட்டாதரணி
சண்டைப் பயிற்சி - கிரிஸ் ஆன்டர்சன், கனல் கண்ணன், தியாகராஜன்
நடனம் - ராஜுசுந்தரம்
தயாரிப்பு நிர்வாகம் - ஜெயராமன், சி வி குமார்

இயக்கம் - ஜி கே மணிகண்டன்

தாம் தூம் ஆர்ப்பாட்டமாக பொங்கலுக்கு வருகிறது.