கத்தியின்றி ரத்தமின்றி காதலைச்‌ சொல்லும் பிடிச்சிருக்கு

செவ்வாய், 8 ஜனவரி 2008 (12:44 IST)
webdunia photoWD
பொதுவாக காதலை ஜெயிக்க வைக்க அடிதடி, குத்து ரத்தம் என்று ரனகளம் ஆவது காதல் கதைகளில் சகஜ‌ம் ஆனால் காதலை ஜெயிக்க வைக்க கத்தியின்றி ரத்தமின்றி நல்ல வழியைக் கூறும் படம்தான் பிடிச்சிருக்கு.

காதல் வெற்றிபெற இப்படிக்கூட ஒரு வழியிருக்கிறதா என்று காதலர்களுக்கு சில சூத்திரங்களை சொல்கிற சாத்திரம் போல பி‌டிச்சிருக்கு அமையும். கத்தியின்றி ரத்தமின்றி நன்முறையில் ஒரு காதல் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பளிர் என்று சொல்கிற இப்படத்தை சித. செண்பககுமார், ந. சுரேஷ் குமார் தயாரிக்கிறார்கள். இயக்குநர் - கனகு.

பட நாயகன் அசோக், நாயகி விசாகா, சம்பத், சரண்யா, கஞ்சா கருப்பு. இந்த ஐந்தே பாத்திரங்களை வைத்து பின்னப்பட்ட கதை, புதிய திரைக்கதை ஆறாவது பாத்திரமாக பேசப்படும். படத்தில் சண்டைக் காட்சிகளும் இல்லை, நடனமுமில்லை, நான்கே பாடல்கள் அவையும் கதை சொல்லும் காட்சிகளாகவே இருக்கும்.

நடுத்தர நகரத்தில் நகர்கிறது இக்கதை. நாயகனின் டிரான்ஸ்போர்ட் கம்பெனி செட் ஒன்று பிரம்மாண்டமாகப் போடப்பட்டுள்ளது. படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் பெயர் பெற்றுத்தரும்படி ஒரு முழுமையான படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் படக்குழு இறுதிக்கட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கிறது.

webdunia photoWD
இசை - மனு ரமேஷன்
ஒளிப்பதிவு - த.வீ. ராமேஸ்வரன்
பாடல்கள் - ச. ரமேஷன் நாயன், யுகபாரதி, விவேகா
கலை- விதேஷ்
நடனம் - காதல் கந்தாஸ்
தயாரிப்பு நிர்வாகம் - சார்லஸ் ரவிதம்பி
தயாரிப்பு மேற்பார்வை - கா. பால கிருஷ்ணன்
எடிட்டிங் - கு. சசிகுமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -கனகு

தயாரிப்பு - சித. செண்பக குமார்