விளையாட்டு படத்‌தி‌ல் நடி‌க்கு‌ம் எ‌ழி‌ல்வே‌ந்த‌ன்

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (12:31 IST)
ஸ்ப்ரோ பிலிம்ஸ் பிரைவேட் லிட் என்ற பட நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் - விளையாட்டு. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கிறார் எஸ். எழில்வேந்தன். கதாநாயகியாக காதல் சரண்யா நடிக்கிறார்.

இவர்களுடன் கஞ்சா கருப்பு, பாண்டியராஜன், மகாநதி சங்கர்.லதா, நம்பிராஜன், பூபதி, கவர்ச்சி நடிகை சீமா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ஆன்ட்ரு இதில் நடிக்கிறார்.

குரு வேலையில்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவன். அவன் வெள்ளை என்ற தாதாவிடம் உதவியாளராக சேர்கிறான். வெளிநாட்டு போதை மருந்துகளை கடத்தி வந்து இந்தியாவில் விற்பதுதான் அவன் தொழில். அப்படிப்பட்ட குரு கல்லூரி மாணவி பிரியாவை பார்க்கிறான். அவளது பார்வையில் குருவின் ஒவ்வொரு செயலும் நல்ல விதமாகவே தெரிகிறது. அதனால் அவளுக்கு குரு மீது காதல் ஏற்படுகிறது.

குருவுக்கோ அவளை அனுபவித்துவிட்டு துரத்திவிட வேண்டும் என்ற எண்ணம்தான். இதற்கிடையே தாதாவான வெள்ளைக்கும், குருவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. வெள்ளை பிரியாவை கடத்திச் சென்று கற்பழிக்க முயல்கிறான்.

அவளை குரு காப்பாற்றுகிறான். அதன் பிறகு அவள் மீது உண்மையிலேயே அவனுக்கு காதல் வருகிறது.

இந்த படத்துக்காக 15 நாட்கள் பாழடைந்த கட்டடத்தில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இந்த சண்டைக்காட்சியில் நடித்த கதாநாயகி சரண்யா, கை கால்களையோ, ஆயுதங்களையோ பயன்படுத்தாமல் எதிரிகளை வீழ்த்துவது போல் புதுமையான முறையில் அமைக்கப்பட்டது.

இசை - ஜாஸிஜிப்ட்
ஒளிப்பதிவு - டி. கண்ணன்
பாடல்கள் - பழனிபாரதி, யுகபாரதி, சினேகன், பிரியன்
படத் தொகுப்பு - சுரேஷ் அர்ஸ்
கலை-வினோத்
சண்டைப் பயிற்சி -ரன்ரவி
நடனம் - சிவசங்கர், தினேஷ், ஸ்ரீதர், நோபெல்
தயாரிப்பு நிர்வாகம் - முத்து
தயாரிப்பு மேற்பார்வை - வால்ராஜ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எஸ். எழில்வேந்தன்
தயாரிப்பு - எஸ். கண்ணன்

வெப்துனியாவைப் படிக்கவும்