சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 14வது படம் `ஜெயம் கொண்டான்.' இதில் வினய் ஜோடியாக பாவனா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏவிஎம்-ல் கடந்த 14ம் தேதி பூஜையுடன் துவங்கியது.
பிரபல இயக்குனர் மணிரத்னத்தை 'பகல் நிலவு' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த இதே நிறுவனம் மூலம் அவரது உதவியாளரான ஆர். கண்ணன் என்பவர் `ஜெயம் கொண்டான்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இதுதான் எங்களின் இலக்கு என்று குறிவைத்து பயணிக்கும் மூவரின் வாழ்க்கையில் எந்த இலக்கும் இல்லாமல் வாழும் ஒருவன் குறுக்கிட... அவனை வென்று லட்சிய கனவுகளை எப்படி வென்றான் என்பதே `ஜெயம் கொண்டான்'.
இதில் `உன்னாலே உன்னாலே' புகழ் வினய் ஹீரோவாக நடிக்கிறார். இவரது ஜோடியாக பாவனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் லேகா வாஷிங்டன் நடிக்க மற்றும் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
பாடல்கள் - கவிஞர் வாலி, நா. முத்துகுமார், கபிலன், யுகபாரதி இசை - வித்யாசாகர் ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம் எடிட்டிங் - வி.டி.விஜயன் கதை, திரைக்கதை, இயக்கம் - ஆர். கண்ணன் தயாரிப்பு - டிடிஜி தியாகசரவணன், செல்வி தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்