மாதவன்‌-பாவனா ‌மீ‌ண்டு‌ம் இணையு‌ம் வாழ்த்துகள்

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (17:09 IST)
பிரமிட் சாய் மீரா - அம்மா கிரியேஷன்ஸ் ம‌ற்று‌ம் சிவா இணைந்து வழங்கும்
பட‌ம் வா‌‌ழ்‌த்து‌க‌ள். ‌சீமா‌ன் பட‌‌த்தை இய‌க்க மாதவன் - பாவனா ‌மீ‌ண்டு‌ம் இணை‌கி‌றா‌ர்க‌ள்.

webdunia photoWD
தன்னையும் நேசித்து சமூகத்தையும் நேசிக்கிற இளைஞனாக மாதவன் நடிக்கிறார். இவரது ஜோடியாக சமூக பார்வையுள்ள ஒரு அழகிய பெண்ணாக பாவனா நடிக்கிறார். மேலும் வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க இளவரசு, 'பிரண்ட்ஸ்' விஜயலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை அன்னையர் தினம் கொண்டாடும் நாம் தான் அதே அன்னையை முதியோர் இல்லத்தில் கொண்டு விடுகிறோம். தன்னைப் போல் மற்றவரையும் நேசிக்க வேண்டும் என்கிற தத்துவத்தை வலியுறுத்துகிறவர்களுக்கு என்றுமே என் 'வாழ்த்துகள்' என்று இப்படம் மூலம் சொல்ல வருகிறார் இதன் இயக்குனர் சீமான்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் பாடல்கள் அனைத்தும் மாலத்தீவில் கம்போசிங் செய்யப்பட்டது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

ஒளிப்பதிவு - பெ.லோ. சஞ்சய்
பாடல்கள் - நா. முத்துக்குமார்
படத்தொகுப்பு - கா. பழனிவேல்
கலை - வீரசமர்
நடனம் - கல்யாண், தினேஷ்
சண்டைப்பயிற்சி - இந்தியன் பாஸ்கர்
தயாரிப்பு நிர்வாகம் - நா. மகேந்திரன்
நிர்வாக தயாரிப்பு - நாகேந்திரன்
தயாரிப்பு - சி. அருணா மகேஸ்வரி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சீமான்

சென்னை, பழனி, கொடைக்கானல், கோயம்புத்தூர், ஆலப்புழா, விசாகப்பட்டணம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இப்படம் மேன்மையான குடும்ப பின்னணியில் மென்மையான ஒரு காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டி, நுரேலியா போன்ற இடங்களில் இரண்டு பாடல்காட்சிகளும் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பு முடிந்து டிசம்பர் மாதம் வெளிவரவிருக்கும் இப்படம், இதுவரை தமிழ்திரை உலகம் பாத்திராத அன்பான காதல் கதையாக மலரும்.

இப்படத்தை உலகெங்கும் பிரமிட் சாய்மீரா தியேட்டர் வெளியிடுகிறது.