ரஜினி அக்கறையாக இருக்கும் அஜீத் படம் பில்லா

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (12:49 IST)
webdunia photoWD
இது திரைத்துறையின் வசந்தகாலம். பல புதிய முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. பட விநியோகத் றையில் பொன் விழா கண்ட நிறுவனமான ஆனந்தா பிக்சர்ஸ் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது புதுசு. முதல் படம் ஊருக்கு நூறு பேர் தயாரித்து ஜானாதிபதி விருது பெற்றது. அடுத்த படமாக உருவாவது அஜீத் நடிக்கும் பில்லா. பழைய தமிழ் படங்கள் ரீமேக் ஆகும் இன்று. அன்று ரஜினி நடித்து எட்டுத்திக்கும் வெற்றி முரசு கொட்டிய பில்லாவும் ரீமேக் ஆகிறது. இதை பத்தோடு பதினொன்றாகச் சேர்த்திட முடியாது.

ஏனென்றால் இதில் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான அம்சங்கள் ஏராளம் அமைந்திருப்பதாகக் கூறுகிறார் தயாரிப்பாளர் ஆனந்தா பிக்சர்ஸ். எல் சுரேஷ் நான் எங்க படக் கம்பெனி சார்பில் படம் தயாரிப்பது என்று முடிவான பின் ஊருக்கு நூறு பேர் எடுத்தோம்.முதல் படமே நேஷனல் அவார்டு வாங்கியது. அவார்டுக்கு ஒரு படம் எடுத்தது ரிவார்டுக்கு ஒரு படம் எடுக்கலாம் என்று நினைத்தோம். அஜீத்தை வைத்து தயாரிக்க விரும்பினோம். அவர்தான் பில்லா ரீமேக் விஷயத்தக்கு பிள்ளையார் சுழிபோட்டவர். இதை ரஜினி சாரிடம் சொல்லி பர்மிஷன் கேட்டபோது அவர் மிகவும் குதூகலமாகி சம்மதித்ததுடன் அஜீத்தை வாழ்த்தியது பெரிய விஷயம் என்றவர் படத்தின் சிறப்பம்சங்கள் பற்றிப் பேசும்போது...

படமே ஒரு ஹைலைட்டான படம்தான். 1979ல் பில்லா வந்தபோது அது ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல். சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா மாதிரி எம்ஜிஆருக்கு நாடோடி மன்னன் மாதிரி ரஜினி என்கிற சூப்பர் ஸ்டார் இமேஜை உச்சத்துக்கும் கொண்டு சென்ற படம் பில்லா அப்போது அது ஸ்டைலாக இருந்தது. இந்த டெக்னாலஜி யுகத்தில் இன்னும் படு ஸ்டைலாக இருக்கும்படி உருவாக்கி வருகிறோம் என்கிறார்.

அஜீத் படத்தில் மட்டுமல்ல வேறு எந்தப் படத்திலும் வராதபடி பிரம்மாண்டமான செட்டை ஏவிஎம் ஸ்டுடியோவில் போட்டு படமாக்கயுள்ளனர். மொத்தப் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு மலேசியாவில் இதுவரை திரைக்கேமரா நுழையாத பல இடங்களில் நடந்துள்ளது சிறப்பு.

ஐந்து பாடல்கள் யுவனின் கலக்கல் இசையில் மை நேம் இஸ் பில்லா ரீமிக்ஸ்... வரிமிக்ஸ் எல்லாம் கலந்த கலக்கலாக இருக்கும்.

ரீமேக் செய்யும்போது ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? என்று கேட்டால், ரஜினி சார் நடித்த ஹிட்டான ஒரு கதையில் கைவைக்க எங்களுக்குத் தைரியமில்லை. எனவே அதே கதை. அதைத் தொடாமல் வேறு என்னவெல்லாம் பிரமாதப்படுத்த முடியுமோ அவ்வ¨வும் செய்து இருக்கிறோம் என்கிறார் சுரேஷ்,

படத்தின் தரத்துக்கு பாடல் காட்சிக்கு போடப்பட்டுள்ள பெரிய செட் ஓர் உதாரணம். மலேசியாவில் லங்காவி தீவில் ஹேங்கிங் ஏர் பிரிட்ஜ் என்கிற தொங்கும் பாலம் இருக்கிறது. இரண்டு மலைகளுக்கு நடுவே தொங்கும் படி மைத்திருக்கிறார்கள். அதில் ஏறினால் கீழே அதள பாதாளம். பள்ளத்தாக்கு அந்தப் பாலத்தில் அஜித் வில்லனிடமிருந்து தப்பித்து எகிறும் காட்சி மயிர்க்கூச்செரிய வைக்கும். இக்காட்சியை டூப் இல்லாமல் அஜீத் நடித்துள்ளது அவரது ஈடுபாட்டை உணர்த்தும். இது தமிழ்ச் சினிமாவில் யாரும் எடுக்காத ரிஸ்க் என்று பேசப்படும். ஸ்டண்ட்மாஸ்டர் வில்லியங் ஆங் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் அதிரடியின் உச்சமாக பேசப்படும். இந்த மாஸ்டர் ஜாக்கிசானின் 3 படங்கள் உட்பட பல ஹாலிவுட் படங்களின் மாஸ்டர்.

ஒரு தமிழ்ப்படத்துக்கு முழுக்க வெளிநாட்டு அதுவும் சைனீஷ் மாஸ்டர் பணிபுரிவது இதுவே முதல்முறை.

மலேசியாவில் உள்ள ஸ்ரீமுடா கார் பேக்டரியில் ஒரு கார் சேசிங் எடுக்கப்பட்டுள்ளதாம். கிரிக்கெட்டில் ஸிபின் பால் பார்த்திருக்கிறோம். சுழன்று வரும்பந்து காரே தன்னைத்தானே சுழற்றி சுழலுவது அதுவும் 200 கிமீ வேகத்தில் என்றால் கற்பனை செய்ய முடிகிறதா? இந்த ஸ்பெஷல் காரின் சஸ்பென்ஷன், வீல் எல்லாம் வேறு மாதிரி பிரத்தியேகமாக இருக்கும். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இது இப்போது லேட்டஸ்ட். அதை முதலில் தமிழ்ப்படத்துக்கு கொண்டு வந்து பயன்படுத்திருக்கிறார்கள். போலிஸின் முற்றுகையில் துப்பாக்கிகள் புடை சூழ வளைக்கப்பட்ட அஜீத் இப்படிச் சுழன்று ஸ்பின் கார் மூலம் தப்பிப்பது இதயததை எகிற வைக்கும் காட்சி. இந்தக் காட்சியில் அஜீத் நடித்த போது கூடி நின்று வேடிக்கை பார்த்த ஆயிரம் பேரும் ஆரவாரம் செய்தது மெய் சிலிர்க்க வைத்ததாம்.

மலேசியாவில் பந்து கேவ் எனப்படும் பத்துமலை உள்ளதாம். இப்பகுதியில் உள்ள முருகன் சிலையின் உயரம் 120 அடி. இந்த மலையடிவாரக் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிரசித்தம். இனனாரு அஜீத் பாத்திரம் பங்கு பெறும் இக்காட்சிக்காக மீண்டும் ஒரு தைப்பூசத் திருவிழாவையே நடத்தி பதிவு செய்துள்ளனர். இதற்காக இங்கிருந்தே 60 நடனக் கலைஞர்களும், அங்குள்ளவர்கள் 500 பேர் இடம் பெற்று பால்காவடி. பன்னீர்காவடி. மயில்காவடி என ¨த்து வகை ஆட்டங்களும் ஆடி படமானது. இங்கு மட்டுமே ஏழு நாட்கள் படப்பிடிப்பு. உள்ளூர் மக்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டுள்ளது ஒரே திருவிழாக் கோலமாய் இருந்ததாம்.

வெளிநாட்டு ஆடல் அழகிகள் 50 பேர் உள்பட நூறு பேருக்கும் மேல் வெளிநாட்டுக் கலைஞர்கள் படத்தில் பங்கு பெற்றுள்ளனராம்.

உடைகள், காட்சிகளின் பின்புலம். ஒலிப்பதிவு, அனைத்திலும் ஹாலிவுட் தரத்தைக் கொண்டுவரும்படி படம் உருவாகி வருகிறது.

படம் பற்றிய தகவல்களைக் கூறிய தயாரிப்பாளர் எல். சுரேஷ் முத்தாய்ப்பாக இப்படம் வானளாவ உயர்ந்து வெற்றியை பில்லா தொடப் போவது உறுதி. எப்படிச் சொல்கிறேன் என்றால் இந்தப் படம் தொடங்கியது முதல் ரஜினிசார் ஆர்வமாக விசாரித்துக் கொண்டே இருக்கிறார். பில்லா எப்படி வந்திருக்கிறது என்று அறிவதில் அவருக்கு உற்சாகம். இதில் அவர் காட்டும் அக்கறையே பட வெற்றிக்கு அச்சாரமாகி விட்டது.

இரு வேடங்களில் அஜீத், பிரபு, நயன்தாரா, நமீதா, சந்தானம் நடிப்பில் திரைக்கதை எழுதி இயக்குபவர் விஷ்னுவர்தன். ஒளிப்பதிவு நீரவ்ஷா, இசை யுவன் சங்கர்ராஜா, எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், நடனம் கல்யாண், பாடல்கள் பா. விஜய், வசனம் சி. கண்ணன், கலை மிலன், தயாரிப்பு மேற்பார்வை எஸ் சத்தியமூர்த்தி. புரொடக்ஷன் கன்ட்ரோலர் எச் முரளி, ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்யூட் சார்பில் தயாரிப்பு எல். சுரேஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்