அமீரின் எல்லா படங்களுக்கும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாதான் இசையமைத்து வருகிறார்.
யுவன் அமீருக்கென்று சிறப்பு கவனம் எடுத்து வேலை பார்ப்பார். அமீர் படங்களுக்கு இசையமைக்க இழுத்தடிக்கமாட்டார். அமீர் கேட்கும் நேரத்தில் எல்லா பாடல்களுக்கும் இசையமைத்து கொடுத்துவிடுவார். அடுத்து அமீர் தயாரித்து நடிக்கும் யோகி படத்திற்கும் யுவன்தான் மியூசிக் போடுகிறார். இதற்காக அமீரும் யுவனும் பிரான்ஸ் செல்ல இருக்கிறார்கள்.
இப்படி வெளிநாடுகளுக்குச் சென்று இசையமைத்தால் பாடல்கள் பிரமாதமாக வரும் என்று ஒரு சென்டிமெண்ட் கோடம்பாக்கத்தில் பரவியிருக்கிறது.