ராக்கெட் ராஜா

Webdunia

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (18:23 IST)
இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ஆங்போக் (மிரட்டல் அடி) என்ற சூப்பர் டூப்பர் படத்தை தயாரித்த "ஷாம்மோன்கல் பிலிம் இன்டர்நேஷனல்" கம்பெனியின் அடுத்த தயாரிப்பு தான் "டைனமைட் வாரியர்". இந்த படத்தை பலகோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்து உள்ளனர்.

இந்த "டைனமைட் வாரியர்" அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆசிய பகுதிகளில் வெளியாகி ஏறத்தாழ 350 கோடி வசூலித்து வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

தற்போது இந்த படத்தின் அகில இந்தியா உரிமையை "ஜெமி விஷன்" என்ற நிறுவனம் வாங்கி "ராக்கெட் ராஜா" என்ற பெயரில் ஆகஸ்ட் இறுதியில் ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியிட தீவிர பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த படத்தின் ஹீரோ டான், 20 வயது இளம் கதாநாயகன், குழந்தை பருவம் முதல் ஜிம்னாஸ்டிக், நீ பைட், கத்தி சண்டையில் கடுமையான பயிற்சி பெற்று, இந்த படத்திற்காக தன் முட்டியால் பாறாங்கற்களை உடைத்து பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறுதியில் நடிக்கத் தொடங்கினார்.

ஒவ்வொரு சண்டைகாட்சியின்போதும் ஆம்புலன்ஸ் எப்போதும் இவருக்காக தயாராக இருக்கும்.

எந்த ஒரு காட்சியிலும் டூப்போ அல்லது ரோப்போ உபயோகிக்காமல் 100 சதவீதம் "நீ பைட்" படமாக்கப்பட்டுள்ளது.

சண்டை காட்சிகளில் நம் ஊர் "கையெறி குண்டுகளை" போல ஹீரோ "கையெறி ராக்கெட்டுகளை" கொண்டு எதிரிகளை அழிக்கும் புதிய யுக்தியை இந்த படத்தின் இயக்குனர் மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் கையாண்டுள்ளார்.

இதனால் தான் இந்த படத்திற்கு "ராக்கெட் ராஜா" என்ற பெயரை சூட்டியிருக்கிறார்கள்.

ரசிகர்கள் இதுவரை சினிமாவில் கராத்தே, குங்பூ, நின்ஜா, ஜுடோ, கத்தி சண்டை போன்றவற்றை தான் பார்த்து ரசித்திருப்பார்கள்.

உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக "நீ பைட்" (Knee Fight) முழுமையாக இந்த "ராக்கெட் ராஜா" படத்தில் உபயோகித்து இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு சண்டை காட்சிகள் புதிய விருந்தாக அமையும்.

புருஸ்லீ, ஜாக்கிசான், ஜெட்லி, டோனி ஜா வரிசையில் டான் இந்த "ராக்கெட் ராஜா" மூலம் நிச்சயம் சரித்திரம் படைப்பார்.

வெப்துனியாவைப் படிக்கவும்