ஸ்ரீமூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் 'நண்பனின் காதலி' படத்தைத் தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் தீ. இந்தப் படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். 'தலைநகரம்', 'வீராப்பு' படங்களைத் தொடர்ந்து சுந்தர்.சி அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் இது.
கதாநாயகியாக ராகிணி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் மலேஷியா நாட்டில் நடந்த தமிழ்ப்பெண்களுக்கான அழிகிப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர். பிரபல மாடலான இவர் நடிக்கும் முதல் படம் இது.
மற்றும் விவேக், ஐஸ்வர்யா, சாயாஜி ஷிண்டே, தலைவாசல் விஜய் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இசையமைப்பாளர் தேவா நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. அங்கு சுந்தர்.சி - ராகிணி பங்கு பெற்ற,
நீ இல்லாமல் நான் இங்கேது போதும் போதும் பொய்கள் தீது
- என்ற பாடல்காட்சியும்,
காலை நேரத்தென்றல் கண்ணை மோதும் மின்னல் நீதானே யாவும் நீதானே
- என்ற பாடல்காட்சியும் பதினைந்து நாட்கள் படமாக்கப்பட்டன.
ஒளிப்பதிவு - டி.சங்கர் இசை - ஸ்ரீகாந்த்தேவா பாடல்கள் - யுகபாரதி, பிறைசூடன், கானா பழனி சண்டைப்பயிற்சி - தளபதி தினேஷ் கலை - மனோராஜ் படத்தொகுப்பு - பி.எஸ்.வாசு - எஸ்.சலீம் நடனம் - தினேஷ், எஸ்.எல். பாலாஜி தயாரிப்பு மேற்பார்வை - டி.பி. வெங்கடேசன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜி. கிச்சா
தயாரிப்பு - ஜி.கிச்சா, பி.நந்தா ரகுராம், எம்.சாகுல்ஹமீது
அநீதி செய்பவர்களை தீயைப் போல் சுட்டெரிக்கும் குணம் கொண்ட போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி நடிக்கும் தீ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.