நியூ லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும் சில நேரங்களில்

Webdunia

வியாழன், 19 ஜூலை 2007 (10:51 IST)
அமெரிக்காவில் வாழும் கமப்யூட்டர் இன்ஜினியரிங் இளைஞர்கள் நான்கு பேர் முதன்முறையாக திரைப்படம் தயாரிக்க விருப்பப்பட்டனர். இவர்களின் பூர்வீகம் ஆந்திர பிரதேசம்.

ஹாலிவுட்டில் பிரபலமாக உள்ள கதை வசனகர்த்தா ஆர், ராஜ் என்பவரின் கதையை தேர்வு செய்து தமிழ் திரைப்பட வளர்ச்சி, தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிந்து அதை தமிழில் தயாரிக்க ஆசைப்பட்டனர். இந்த கதைக்கு பொருத்தமான இயக்குனரை தங்களின் இணையதளத்தின் மூலம் தேடி வந்தனர். அப்போது மலையாளத்தில் வித்யா ரம்பம், தெய்வநாமத்தில், ஜானிவாக்கர், தேசானடனம், களியாட்டம், கர்ணம், சாந்தம், 4 ஸ்டூடண்ட்ஸ் ஆகிய படங்களோடு 29 படங்களை இயக்கியவரும், 4 தேசிய விருதுகளை பெற்றவருமான ஜெயராஜ் அவர்களிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார்கள். இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போக உடனே இயக்க ஒப்புக் கொண்டார், இந்த கதைக்கு தகுந்த நடிகரை தேடும்போது தமிழில் பழைய நடிகர் அசோகன் என்பவரின் மகன் வின்சென்ட் அசோகன் என்பவரை தேர்வு செய்தார், தமிழில் ஏய், போக்கிரி, ஆழ்வார் போன்ற படங்களில் வில்லனாக நடித்த இவரே இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதை முடிவு செய்த இயக்குநர் ஜெயராஜ் முதல் முறையாக வின்சென்ட் அசோகனை ஆன்டி ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார், இந்த கதைக்கு தகுந்த நடிகையை தேடிய போது சிறந்த முகபாவனையும், நடிப்பாற்றலும் உள்ள நவ்யா நாயரை தேர்வு செய்தார்கள். இப்படி எல்லா விதத்திலும் புதுமையான கூட்டணி இந்த கதையின் வலுவுக்கு உயிர் ஊட்டும்.
webdunia photoWD


இயக்குனர்களிலும், தயாரிப்பாளர்களிடமும் சில நேரங்களில் இதேபோன்று நடப்பதுண்டு.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் 13 வருடங்களுக்குப் பிறகு பி. சுசிலா பாடிய பாடல் ஒன்றும், மற்றொரு பாடல் டி.எம்.எஸ். குரலில் அவருடைய மகனாக டிஎம்எஸ் பால்ராஜ் பாடிய பாடலும் சினிமாவின் பொற்காலத்திற்கு நம்மை அழைத்து செல்லும். இந்த அதிர்ஷ்டம் ரசிகர்களுக்கு சில நேரங்களில் கிடைக்கக் கூடிய அபூர்வ விருந்து.

மிக முக்கியமான வேடத்திலும் வினித்தும், ரமேஷ்கண்ணாவின் காமெடியும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

ரகுவரன் இதுவரை செய்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பின் போதே ஏராளமான கைத்தட்டல்களுடன் ஆனந்த கண்ணீருடன் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார்,

படப்பிடிப்பு முடிந்த பிறகும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலக முடியாமல் மூன்று நாட்கள் மூணாறு நகரில் இருந்து கிளம்ப முடியாமல் தவித்திருக்கிறார். இதுவரை யாரும் பார்த்திராத புதுப்புது லொகேஷன்கள் அமைந்துள்ள மூணாறு ஊரில் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு எந்தவொரு படத்திலும் வந்திராத சென்னையிலுள்ள இடங்களில் இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

விரைவில் திரையில்....