படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்

Webdunia

புதன், 11 ஜூலை 2007 (20:10 IST)
விஷால் கதாநாயகனாக நடிக்கும் படம் மலைக்கோட்டை. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு திருச்சி பகுதியில் நடந்தது. தற்போது சென்னை பிலீம் சிட்டியில் இப்படத்தின் சேஸிங் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

விஷால், ப்ரியாமணியை பைக்கில் பின்னால் வைத்துக் கொண்டு கிளம்ப அவரை எதிரிகள் துரத்துவது போன்று காட்சி. விஷால் பைக்குக்கு எதிரே ஆட்டோ மோதுவது போன்ற இக்காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஆட்டோவிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த கம்பி விஷாலை பதம் பார்த்துவிட்டது.

தோல் கிழிந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. காயம்பட்ட இடத்தில் 14 தையல் போட்டிருக்கிறார்கள். காயம் குணமாகும்வரை ஒருவாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று விஷாலிடம் டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்