கமலம் கலைக்கூடம் தயாரிப்பில் கே.பாரதி இயக்குகிறார் "வள்ளுவன் வாசுகி".
"காதலர்களுக்கு எதிராக வில்லன்கள் இருப்பது தமிழ் சினிமாவில் புதுசில்லை; காதலர்களுக்கு காதலே வில்லனா இருந்தா புதுசுதானே.. அது தான் "வள்ளுவன் வாசுகி" என தான் இயக்கப்போகும் புதுப்படம் பற்றி சூப்பர் ஒபனிங் தருகிறார் கே.பாரதி."
"சின்னபுள்ள", "மறுமலர்ச்சி", "கள்ளழகர்", "மானஸ்தன்" படங்களை தொடர்ந்து பாரதி இயக்ம் படம் இது.
கமலம் கலைக்கூடம் என்றும் புதுப்பட நிறுவனம் சார்பில் ஏ.எமவாசுகம், வி.எஸ்.குமரன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகன்-நாயகியாக சத்யா, ஸ்வேதா அறிமுகமாகின்றனர். நாயகியின் தந்தையாக கோனார் கதாபாத்தில் ரஞ்சித் நடிக்கிறார். மேலும் சீதா, பொண்வண்ணன், குயிலி, வடிவுக்கரசி, வாசுவிக்ரம், முத்துக்காளை நடிக்க, இவர்களுடன் கல்யாணம் என்ற கேரக்டரில் இயக்குனர் பாரதியும் பங்கு பெறுகிறார்.
"காதலுக்காக மண்ணின் மனிதர்களையும் நேசித்த உறவுகளையும் உதறிவிட்டு ஓடாமல் ஊரின் பெருமையை தாக்கும் ஒரு பெண்ணின் காதல் கதை தான் இப்படம்" என வள்ளுவன் வாசுகி பற்றி சிலாகிக்கிறார் கே.பாரதி.
இது கோணார் சமூகத்தில் நடக்கும் ஒரு கதை என்பதால் அவர்கள் அதிகம் வாழும் கொள்ளிடம் கதைக்களமாக தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக 20 லட்சம் ரூபாய் செலவில் ரஞ்சித்தின் வீடு போன்ற பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது . இரண்டாயிரம் மாடுகள் பங்குபெறும் ஒரு காட்சியும் படமாக்கப்படுகிறது.
கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது இசையில் 6 பாடல்கள் பதிவாகியுள்ளது. அத்தனை பாடல்களும் முத்து முத்தாக கோர்க்கப்பட்டுள்ளதாக கூறும் இசையமைப்பாளர் அதற்கு காரணம் கதையின் அழுத்தம் தான் என்கிறார். கும்பகோணம், மாயவரம் உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.