உலக பிரசித்தி பெற்று.. காலம் கடந்து நிற்கும் மறக்க முடியாத எல்லா திரைப்படங்களுமே.. காதலை மையமாகக் கொண்டு மனித வாழ்வினை பதிவு செய்யப்பட்டதே..
ராமேஸ்வரமும் இந்த வகையைச் சார்ந்தவையே.. சிவாநந்த ராசா என்ற ஜீவனுக்கும்(ஜீவா) வசந்தி என்ற(பாவனா) பெண்ணுக்கும் ஏற்படும் காதலே கரு.
வேகமும், வேதனையும் கொண்ட முகம், வரண்ட உதடுகள்.. அனல் கக்கும் பார்வை.. இது தான் ஜீவா..!
ஒரு அகதி இளைஞனாக வாழ்ந்திருக்கிறார். பேச்சும், நடையும் மிரட்சியடைய வைக்கும்.
மனம் முழுவதும் நெருப்பை அடைகாக்கும் இளைஞன் தாத்தாவின் அன்பை தவிர்க்க இயலாது அகதியாக ராமேஸ்வரம் வருகிறான்.
எல்லோராலும் அன்பு செய்யப்பட்டு சந்தோஷம் மட்டுமே கிடைக்கப் பெற்ற வசந்தியின் இரக்கம் ஜீவன் மீது காதலை ஏற்படுத்துகிறது.
ஆயிரம் உண்மையான அகதிகளை பத்து நாட்கள நடிக்க வைத்திருக்கிறோம்.
எல்லோத்தையும் இழந்து அகதிகளாக இந்தியா வரும் ஒரு காட்சியில், உண்மையான அகதிகள் கதறி அழுதுவிட்டார்கள்.
ராமேஸ்வரத்திற்கு பிறகு.. ஜீவா உலகத் தமிழர்களின் வீட்டுப் பிள்ளையாகி விடுவார் என்பதில் சந்தேகமே இல்லை. வலியையும், ஆதங்கத்தையும் சமூக கோபத்தையும் இத்தனை அழகாக ஜீவா தனது முகபாவத்தில் காட்டுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க இயலாது.
சுட்டித் தனமும், அன்பும் கொண்ட பெண்ணாக பாவனா...
அகதிப் பெரியவராக வரும் மணிவண்ணன் பாரம்பரியம் கொண்ட பெரிய மனிதராக லால், இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட், அகதிகளாக வரும் டான்ஸ் மாஸ்டர் சாந்தி, சம்பத்.. மற்றும் அத்தனை பேரும் உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
வாலி நோக்கம் என்ற ஊரில் உடைப்பதற்காக காத்திருக்கும் கப்பல். பிரிட்டிஷ் காலத்து கப்பல் கட்டும் துறைமுகம், ராமர் பாதம், கோதண்டராமர் கோவில், தனுஷ் கோடி, தாவங்காடு கடற்கரை.. இப்படி பல இடங்களும் பாத்திரங்களாக வாழ்ந்திருக்கின்றன.. இராமேஸ்வரத்தில்!
எல்லா தரப்பினரையும் சந்தோசப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் திரைப்படம் காலம் கடந்து நிற்கும்.
தயாரிப்பு : S.N. ராஜா (ITA FILMS)
இயக்கம் : S. செல்வம் ஒளிப்பதிவு : N.K. ஏகாம்பரம் இசை : நிரு எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ் பாடல்கள் : கபிலன், நா.முத்துகுமார் சண்டைப் பயிற்சி : ஆக்ஷன் பிரகாஷ் தயாரிப்பு மேற்பார்வை : P. ரங்கநாதன், சுபேதர்.