புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து புத்துணர்ச்சியோடு இருக்கிறார் தமன்னா. வருட தொடக்கத்தில் வீரம் வெளியாகும் மகிழ்ச்சி வெளிப்படையாக தெரிகிறது. அந்த சந்தோஷத்துடன் பல்வேறு மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகிறார். 2014 சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை அந்த பேட்டிகளினூடே பளிச்சிடுகிறது.
FILE
எப்படி புத்தாண்டு கொண்டாட உங்களுக்கு விருப்பம்?
எனக்கு ஒவ்வொரு புத்தாண்டும் யுனிக் ஆக இருக்க வேண்டும். அதனால் ஒரே இடத்தில் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு இடம். குடும்பத்தோடுதான் எப்போதும் புத்தாண்டு கொண்டாட பிடிக்கும்.
இந்த புத்தாண்டில் உங்கள் விருப்பம் என்ன?
ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இல்லை என்றால் உங்களால் வாழ்க்கையில் எதையும் என்ஜாய் செய்ய முடியாமல் போய்விடும்.
வீரம் படத்தில் நடித்தது?
நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். வீரத்தில் என்னுடைய கேரக்டர் எனக்குப் பிடித்திருந்தது. சின்ன நகரத்தில் தமிழ் கலாச்சாரத்தில் வாழும் பெண். தமிழ் ரசிகர்களை எளிதாக கவரக் கூடிய கதாபாத்திரம். படம் நன்றாக வந்திருக்கிறது.
FILE
அஜீத்...?
அஜீத்துடன் நடித்ததை மறக்க முடியாது. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர் என்னை முழுமையாக மாற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமாவில் நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன். அவர் ஒரு அப்ஸலியூட் ஜென்டில்மேன்.
அடுத்து என்னென்னப் படங்களில் நடிக்கிறீர்கள்?
எனக்கு தென்னிந்திய படங்களில் நடிக்கவே விருப்பம். எஸ்.எஸ்.ராஜமௌலியின் தமிழ், தெலுங்குப் படமான மகாபலியில் நடிக்கிறேன். வேறு சில புராஜெக்ட்கள் பேசிக் கொண்டு இருக்கிறோம். இந்த வருடம் மகேஷ் பாபுவுடன் நடித்த ஆகடு வெளியாகவிருக்கிறது.
FILE
ஹிந்தியில் என்னென்னப் படங்கள்?
இட்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் என்ற படம். சஜித் ஃபர்கத் இயக்குகிறார். இந்தப் படத்தில் அக்சய் குமாருடன் நடிக்கிறேன். அதேபோல் ஹிம்மாத்வாலா இயக்குனர் சஜித் கான் இயக்கத்தில் ஹம்சகல்ஸ் என்ற படத்தில் நடிக்கிறேன். சைஃப் அலிகான், ரித்தேஷ் தேஷ்முக், ராம் கபூர், பிபாசா என்று இதில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
நீங்கள் நடித்ததில் பிடித்தப் படம்?
தமிழில் பையா. தெலுங்கில் 100 சதவீதம் லவ்.
FILE
காதல்... திருமணம்...?
இப்போதைக்கு நான் தனியாகதான் இருக்கிறேன். வாழ்க்கை மகிழ்ச்சியாகதான் போய்க் கொண்டு இருக்கிறது. சரியான நேரத்தில் எனக்குப் பொருத்தமானவரை சந்திப்பேன். அது நடக்கும் போது அனைவருக்கும் தெரிய வரும்.