ரசிகர்களின் ஆதரவின்றி நடிகர்கள் வளர முடியாது - விக்ரம்!
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (14:14 IST)
webdunia photo
FILE
பிறந்தநாளை ஆயிரக்கணக்கான மனிதர்களின் விழிகளை திறக்கும் பிரத்யேக தினமாக மாற்றியிருக்கிறார் விக்ரம். ரசிகர்களுக்கு அவர் அளித்திருக்கும் வரம், அவர் பெயரில் உருவாக்கியிருக்கும் இணையதளம். இத்தனைக்குப் பின்பும் அடக்கமாகப் பேசுகிறார் சீயான்.
கண் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
காசி படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்தபோது பார்வை இல்லாததன் கொடுமையை உணர முடிந்தது. கண் தெரியாதது போல் நடிப்பதே இவ்வளவு கஷ்டம் என்றால், வாழ்வது எவ்வளவு கஷ்டம். எனக்குள் எழுந்த இந்த கேள்விதான் நான் கண் தானம் செய்ய காரணமாக இருந்தது.
தானத்தில் சிறந்தது கண் தானம் என்று சொல்வார்கள். என்னுடன் எனது ரசிகர்களும் கண் தானம் செய்தார்கள். இது சின்ன பொறிதான். நாளை எனது எல்லா ரசிகர்களிடமும் இந்த எண்ணம் உருவாகும். விரைவில் விக்ரம் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்குகிறேன். இதனுடன் இணைந்து கண் தான இயக்கம் செயல்படும்.
நீங்கள் கண் தானம் செய்ததை உங்கள் குடும்பத்தில் எப்படி எடுத்துக் கொண்டார்கள்?
என்னுடைய மகளும் கண் தானம் செய்கிறேன் என்றாள். என்னுடைய மகனுக்கும் அந்த விருப்பம் இருக்கிறது.
எங்கோ கண்கானா இடத்திலிருந்து அன்பையும் அபிமானத்தையும் தந்து வரும் ரசகர்களின் ஆதரவு இல்லாமல் எந்த நடிகரும் வளரவோ, உயரவோ முடியாது. அந்த ரசிகளின் அதிகபட்ச ஆசை தனது அபிமான நடிகரின் ஆட்டோகிரா·ப், உடன் நின்று ஒரு ·போட்டோகிரா·ப். அன்பான ரசிகன் வேறு என்ன ஆசைப்படுகிறான்?
என்னைப் பொறுத்தவரை என்னை முழுமையாக வெளிப்படுத்தி அவர்களிடம் ஒப்படைப்பதே சிறந்த அர்ப்பணிப்பு. அதற்காக தொடங்கப்பட்டதுதான் சீயான்விக்ரம்.நெட்.
இந்த இணையதளத்தின் செயல்பாடு எப்படி இருக்கும்?
என்னைப் பற்றிய தகவல்கள், நடித்த, நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் விவரங்கள். எதிலும் பிரசுரமாகாத என்னுடைய அரிய புகைப்படங்கள். தினம் நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உட்பட எல்லா தகவல்களும் இதில் இருக்கும். இந்த வெப்சைட்டிற்கு வரும் சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்படும். அவர்கள் குடும்பத்துடன் என்னைச் சந்திக்கலாம். ஜாலியான போட்டிகளும் உண்டு. வெற்றி பெறுகிறவர்கள் என்னுடன் லஞ்ச் சாப்பிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலம், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் இந்த வெப்சைட் இயங்கும்.