ஸ்கிரிப்டில் எல்லாம் நான் தலையிடுறது கிடையாது. அந்தளவுக்கு எனக்கு நாலெட்ஜ் கிடையாது. ஓபனாக பேசும் ஜீவனின் முகத்தில் தோட்டா வெற்றியின் பிரகாசம். சங்கடமான கேள்விகளுக்கும் சந்தோஷமாகப் பதிலளித்த ஜீவனின் பேட்டியிலிருந்து...
அடுத்து என்ன படம் நடிக்கிறீங்க?
கவிதாலயா தயாரிப்பில் கிருஷ்ண லீலைங்கிற படத்தில் நடிக்கிறேன். ஸெல்வன் டைரக்ட் பண்றார். இவர் ஷங்கர் சாரோட அசிஸ்டெண்ட்.
கிருஷ்ண லீலை-ன்னா மன்மதலீலை மாதிரியான படமா?
அப்படியெல்லாம் இல்லை. மன்மத லீலைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுவொரு ஆக்சன் படம். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.
பயணிகள் கவனத்திற்கு படம் என்னவாயிற்று?
விஜயகுமார் டைரக்ட் பண்ற படம். ஆக்சுவலா அந்தப் படத்துகூகு ஒரு மாசத்துக்கு ரயில் தேவை. அதுதான் தாமதம்.
இனி வில்லனாக நடிப்பீர்களா?
ரசிகர்கள் என்னை ஹீரோவா ஏத்துக்கிட்டாங்க. அதனால இனி வில்லனா நடிக்கமாட்டேன்.
அப்படின்னா இனி ஆக்சன் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பீர்களா?
ஆக்சன் மட்டும் பண்ண நான் விரும்பலை. எல்லாவிதமான கதைகளிலும் நடிக்கணும். டைரக்டர் சொல்ற கதை பிடிச்சிருந்தா நடிப்பேன். மற்றபடி ஸ்கிரிப்ட்ல தலையிடுறதெல்லாம் கிடையாது. அந்தளவுக்கு நாலெட்ஜ் எல்லாம் எனக்குக் கிடையாது.
ஜீவன் படம்ன்னாலே இரண்டு மூன்று ஹீரோயின்கள் இருப்பாங்கன்னு ஆகிப்போச்சு. இதை நீங்க விரும்பறீங்களா?
நான் விரும்புவது இருக்கட்டும். உங்களுக்கு அது பிடிச்சிருக்கா? அதை முதல்ல சொல்லுங்க.
ப்ரியாமணிக்கு நீங்க சிபாரிசு செய்வதாக சொல்லப்படுதே?
நான் யாருக்கும் சிபாரிசு பண்றதில்லை. தயாரிப்பாளரும், இயக்குனரும்தான் ஹீரோயின் யாருங்கிறதை முடிவு பண்றாங்க. நான் அதுல தலையிடுறதில்லை.
சரி, நீங்க தயாரிப்பாளரானால் ப்ரியாமணிக்கு உங்கப் படத்துல வாய்ப்பு கொடுப்பீங்களா?
அது அந்த கதையைப் பொறுத்தது.
தனிப்பட்ட முறையில ஜீவன் ப்ளேபாய, ஆக்சன் ஹீரோவா?
ரெண்டும் பாதி பாதின்னு வச்சுக்கங்களேன். ஆக்சுவலா எனக்கு கடவுள் பக்தி அதிகம். கடவுள் பக்திங்கிறது எனக்கு மூச்சு விடுற மாதிரி. சுருக்கமா கடவுள் எனக்கு சுவாசம் மாதிரி. வெளிநாடு போனாலும் பக்கத்துல ஏதாவது கோயில் இருக்கானுப் பார்த்து, காலையில சாமி கும்பிட்டப் பிறகுதான் அடுத்த வேலை பார்ப்பேன்.