இப்போது புதுமுக நாயகர்கள் கணிசமாக காலூன்றி வருகிறார்கள். அவர்களில் ஒருவராக நம்பிக்கை முகமாகத் தெரிந்தவர் பாலா. ஆனால் சில படங்களுக்குப் பின் ஆளே காணோம். நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது மஞ்சள் வெயில் படத்தில் நடிக்கிறார்.
ஏனிந்த இடைவெளி? மஞ்சள் வெயில் முகத்திலடிக்கும் ஒரு மாலைப் பொழுதில் பாலாவைச் சந்தித்துக் கேட்டபோது -
webdunia photo
WD
"தமிழில் எனக்கு கலிங்காவுக்குப் பிறகு இடைவெளி விழுந்தது நிஜம். எட்டு மாதம் வெயிட் பண்ணினேன். ஏன்? நல்ல மாதிரியான கதை - கேரக்டர் வரட்டும்னுதான். அதுக்கேத்தமாதிரி வந்த படம்தான் மஞ்சள் வெயில். பேசிக்கொண்டே மஞ்சள் வெயிலுக்குள் நுழைந்தார்.
"பேச்சுக்குச் சொல்லலை. ரொம்ப நல்ல சப்ஜெக்ட். கே.எஸ். அதியமான் உதவியாளர் ராஜா டைரக்ட் பண்ற படம். பரத்வாஜ் மியூசிக். சந்தியா, பிரசன்னா நடிக்கிறாங்க. நானும் பிரசன்னாவும் நல்ல ரோல் பண்றோம்" என்றவரிடம்... இரண்டு பேரில் யார் ஹீரோ என்றபோது -
"இந்த படத்தில் ஒரே ஹீரோதான். அந்த ஹீரோ கதைதான். ரெண்டு பேர் சேர்ந்து நடிக்க தயங்குற நிலைமை தமிழில்தான் இருக்கு. மலையாளத்தில், இந்தியில் ரெண்டு பேர் சேர்ந்து நடிக்கிறது - பல பேர் சேர்ந்து மல்டிஸ்டார் பிலிம் எல்லாம் சகஜமா இருக்கு. என்னைப் பொறுத்த வரைக்கும் மலையாளத்துல மம்முட்டி சார் கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். அந்த படத்துல எனக்கு நல்ல பேரு. எனக்கு சேலஞ்சிங்கா நடிக்க வாய்ப்புள்ள படமா இருக்கணும். அதுக்காக காத்திருப்பேன். அப்படி ஒரு படம்தான் மஞ்சள் வெயில். இதுல மெளனராகம் கார்த்திக் மாதிரி பளிச்சென்று மனசுல ஒட்டிக்கற கேரக்டர் எனக்கு" என்றவர் இடைவெளியில் என்ன செய்தார் என விளக்கினார்.
"கலிங்காவுக்குப் பிறகு தமிழில் விழுந்த இடைவெளியில் நான் மலையாளப் பக்கம் போய்ட்டேன். கலாபம் மூலம் அங்கே எனக்கு நல்ல அறிமுகம் கிடைச்சிருக்கு. இங்கே அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கான்னு நாலு படம் முடிச்சிட்டு அங்கே போனேன். இந்த நாலு படத்துல கிடைக்காத பாப்புலாரிட்டி அங்கே அறிமுக நிலையில் கிடைச்சது. என் அதிர்ஷ்டம். மம்முட்டியுடன் பிக் பி நடிச்சேன். அது ராம் கோபால் வர்மா டீம்.பிறகு நவ்யா நாயருடன் ஒரு படம். இப்போது எஸ்.எம்.எஸ், பத்தாம் அத்தியாயம், வர்ம குறிப்புகள், ஹரிந்தரின், ஒரு நிஷ்கலங்கன் படங்கள் கையில் இருக்கு. மலையாளத்துல நடிச்சாலும் jமிழிலும் கவனம் செலுத்தணும்கிற தெளிவு இப்போ கிடைச்சிருக்கு. ஏன்னா இடைவேளையை இடைவெளின்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க."
மீண்டும் மஞ்சள் வெயில் அனுபவத்தில் நுழைகிறார்....
"இது கொஞ்சம் சேலஞ்சிங்கான ரோல். பல பேர் நடிக்கத் தயங்கின ரோல். என்னிடம் நம்பிக்கை வச்சு முடியுமான்னு கேட்டார். நான், நீங்க டைரக்டர்.. என்னால் முடியும்னு நீங்க நம்பினால் என்னால் முடியும்னேன். உன்னால் முடியும் தம்பி நம்புன்னு நம்பிக்கை ள்ஸ் தைரியம் கொடுத்தார் டைரக்டர். நான் உடனே ஓகே சொல்லிட்டேன்" என்று மஞ்சள் வெயில் மறக்காது பேசிக் கொண்டே போனார்.
இன்னொரு ஜாலி கேள்வி பாலாவிடம்... காதல் கிசுகிசு நாயகனிடம் ஏதாவது கிசுகிசு தேற்ற முடியுமா என்று கொக்கி போட்டோம். உங்கள் மனம் கவர்ந்த நாயகி யார் என்று கேட்டால்... "ஒருவர் இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆய்ட்டுது. அவர்தான் சிம்ரன். எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை அவர்" சே. இப்படி கவிழ்த்துவிட்டாரே என்று வெறுப்பு காட்டினோம்.
இப்போதுள்ள நடிகைகளில் யாரைப் பிடிக்கும் - ஏதாவது கிசுகிசு சொல்ல முடியுமா என்றால் -
"நல்லா நடிக்கிற எல்லாரும் பிடிக்கும்" என்றார். "கிசுகிசுங்கிறது சம்பந்தப்பட்டவர்களுக்கு கசக்கும். மத்தவங்களுக்கு பிடிக்கும். எல்லோருக்கும் அடுத்தவங்களைப் பற்றி பேசறது - புறம் பேசுறது பிடிக்கும். ஆனா தங்களைப் பற்றி மத்தவங்க பேசுறது பிடிக்காது. இதுதான் உலகம். ஆனால பாப்புலரான எல்லா மனிதர்களும் இந்த கிசுகிசுச் சுழலில் சிக்கி வந்தவங்தான். என்னைப் பற்றி எந்த கிசுகிசுவும் வரலை. ஆனா கிசுகிசுவுல அடிபட்டவங்க எல்லாரும் பாப்புலர் ஆய்டறாங்க. அதையும் தாண்டி வாழ்க்கையில் ஜெயிச்சுடறாங்க" புது விளக்கம் தருகிறார் பாலா.
அண்ணன் சரவணன் பிரபல ஒளிப்பதிவாளர். இயக்குநராகவும் முகம் காட்ட விரும்புகிறவர். செல்வராகவன் - தனுஷ், ஜெயம் ராஜா - ஜெயம் ரவி - இப்படி அண்ணன் தம்பி பட்டியலில் சரவணன் - பாலா பெயரும் இடம் பெறுமா?
"அந்த எண்ணம் எங்களுக்கும் இருக்கு. அடுத்த ஆண்டு அண்ணன் சரவணன் டைரக்ட பண்ற படத்துல நான் நடிக்கப் போறேன். அப்பாதான் தயாரிப்பாளர். நாங்களும் இந்த அண்ணன்- தம்பி வெற்றிக் கூட்டணியின் வரிசைல இடம்பிடிப்போம். ஏன்னா எனக்கும் அண்ணனுக்கும் நல்ல அண்டர்ஸ்டான்டிங் இருக்கு" என்கிறார்.
இதுவரை நடித்த படங்களில் கிடைத்த அனுபவம் உணர்த்துவது என்ன.... சொல்வாரா பாலா?
"சினிமா பீல்டு போட்டி நிறைஞ்சது. முடிவுன்னு எதுவுமில்லை. ஆரம்பம்னு எதுவுமில்லை. எதுவும் எப்போ வேணும்னாலும் நடக்கும். நமக்கு லைஃப் இவ்வளவுதான்னு நினைக்கக் கூடாது. எப்போ வேணும்னாலும் புது லைஃப் தேடி வரும். அதே போல இனி எதிர்காலமே நம்ம கையில்தான். நம்மளை யாரும் அசைக்க முடியாதுன்னும் நினைக்கக் கூடாது. எதுவும் நிரந்தரம் இல்லை ஆனா நாம மட்டும் சின்சியரா உழைக்கணும்"" என்று தத்துவம் கூறுகிறார் பாலா.