ஒன்றின் மீது ஆசை வந்துவிட்டாலே அதை அடையும் திறமை வந்துவிட்டது என்று அர்த்தம். இந்த வெளிநாட்டுப் பொன்மொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ 'தொட்டால் பூ மலரும்' அறிமுக நாயகன் ஷக்திக்குப் பொருந்தும். சின்ன வயதிலிருந்தே நடிக்க விருப்பம். குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக எம்.பி.ஏ. வரை படித்தார். கடைசியில் முதலில் விருப்பப்பட்ட இடத்துக்கே வந்துவிட்டார்.
இப்போது தன் தந்தை பி.வாசு இயக்கும் 'தொட்டால் பூ மலரும்' படத்தின் நாயகனாகிவிட்டார்.
ஷக்தியுடன் ஒரு சந்திப்பு.
உங்களுக்கு நடிப்பின் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
எங்கள் குடும்பமே சினிமா குடும்பம். தாத்தா பிரபல மேக்கப் மேன். அப்பா பிரபல டைரக்டர். எங்கள் வீட்டில் எப்போதும் சினிமா பற்றித்தான் பேசிக்குவாங்க குடும்பத்தில் இப்படி சினிமா சூழல் இருக்கிறதால எனக்கு சினிமாவுல நடிக்க ஆர்வம் வந்தது பெரிய விஷயமில்லை. நான் சின்ன வயசுல சில படங்களி்ல் நடிச்சேன். 'சின்னதம்பி'யில் ஜூனியர் சின்னதம்பி நான்தான் அதுக்கு கிடைச்ச அடையாளமும் அங்கீகாரமும் எனக்கு நடிக்க ஆசையை ஏற்படுத்தியிருக்கலாம்னு நினைக்கிறேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கிறவற தான் சிறுவயதில் நடிச்சேன். பிறகு வீட்ல விடலை, படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்.
நடிப்பு ஆர்வத்தை வைத்துக்கொண்டு எப்படி படிக்க முடிந்தது?
சின்ன வயசுல நடிச்சதோட சரி. அதுக்குமேல ரெண்டாங் கெட்டான் வயசு. நீ நெனச்சமாதிரி நடிக்கலாம். அதுக்கு முன்னாடி எங்க விருப்பத்துக்கு நீ படித்தாகனும்னு வீட்ல சொன்னாங்க சரின்னு படிச்சேன். நான் விரும்பினபடி டான்பாஸ்கோ ஸ்கூல், லயோலா காலேஜ் எல்லாமே எனக்கு கெடைச்சுது. எம்.பி.ஏ. படிச்சேன் அவங்களுக்கு சந்தோஷம். எங்க தாத்தா மேக்கப் மேன். அப்பாவை இன்னும் உயர்ந்த இடத்துல வச்சிப் பார்க்க ஆசைப்பட்டார். அப்பாவும் டைரக்டர் ஆனார். அதுபோல என் அப்பாவும் நான் மேல்படிப்பு படிக்கனும்னு ஆசைப்பட்டார் படிச்சிட்டேன். இப்போ என்னை வச்சிப் படம் பன்றார். அவர் ஆசைப்பட்டபடி நானும் ஹூரோவாகிட்டேன்.
ஆரம்பத்துல எனக்கு ஒரு மாதிரியாத்தான் இருந்திச்சு. நடிக்க சொன்னால் எதிரில் அப்பா நிற்கிற மாதிரித்தான் தோணிச்சு. அதைத் தவிர்க்க முடியலை. இந்த சூழ்நிலையை என் நிலைமையை அப்பா புரிஞ்சுக்கிட்டார். அப்போ சொன்னார். இங்கே நாம் அப்பா பிள்ளை இல்லை நீ அந்தக் கேரக்டர் நான் டைரக்டர் அப்படியே நினைச்சுக்கோன்னார். மூன்றாவது நாள் என் பார்வை மாறிச்சு அவர் ஒரு டைரக்டராக தெரிஞ்சார். நான் ஆர்டிஸ்ட்டா ஆயிட்டேன். ஒன்று தெரியுமா எங்கப்பாவுக்கு நடிக்க ரொம்ப ஆசை அது அவர் நடிச்சுக் காட்டுறப்போ தெரியும். தான் பெரிய நடிகராக முடியலைங்கிற வருத்தம் ஏக்கம் என்னை நடிகனாக்கியதில் போயிருக்கும்னு நினைக்கிறேன்.
இயக்குநராக அவர் உங்களை எப்படி நடத்தினார்?
வீட்டில் இருக்கும் அப்பா வேறு அதிர்ந்து பேசமாட்டார். கோபமே வீட்டில் வராது. இப்படித்தான் அவரைப் பார்த்திருக்கேன். ஆனால் ஒரு டைரக்டரா நான் பார்த்த போது அது அவரை வீட்டில் பார்த்ததுக்கு நேர் மாறா இருந்திச்சு பயங்கர டென்ஷனா இருந்தார். சில நேரங்களில் பயங்கர கோபம் வரும். இதல்லாம் டைரக்சன் தொழிலில் சகஜம் போலும் இது புரிய சில நாளாச்சு எனக்கு.
முதலில் பேசிய வசனம் நினைவு இருக்கிறதா?
முதல் நாள் ஷுட்டிங் ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்திச்சு. அங்குள்ள சிவாஜி சிலையருகே நின்னு வணங்கிட்டு பேசறமாதிரி டயலாக். முன்னாடி பிள்ளையாரைக் கும்பிட்டு சிவாஜியை கும்பிட்டுப் பேசுவேன். படைப்புக்கு கடவுள் கணேசனை முதல்ல கும்பிட்டேன். இப்போ நடிப்புக்கு கடவுள் கணேசனை கும்பிடறேன்னு சொல்வேன். ஆசீர்வாதம் வேண்டிப் பேசுறது போல வசனம். நல்ல டச்சிங்கா இருந்திச்சு.
உங்களுக்கு யாருடைய நடிப்பு பிடிக்கும்?
நிச்சயமா இது சமாளிக்கும் பதிலில்லை. எல்லார்கிட்டேயும் ஒவ்வொரு விஷயம் பிடிக்கும். ஜெயிச்ச எல்லார்கிட்டேயும் ஏதோ ஒரு விஷயம் இருக்கும். சும்மா யாரும் ஜெயிக்க முடியாது.
கதாநாயகியுடன் நெருக்கமான காட்சிகளில் அப்பாவின் இயக்கத்தில் நடிக்கும் போது தயக்கமில்லையா?
முன்னாடி சொன்ன மாதிரி ஆரம்பத்தில் தயக்கம் இருந்திச்சு, போகப்போக நான் என்னை அந்த கேரக்டரா நெனச்சுக்கிட்டேன். அதனால் எனக்குப் பிரச்சினை இல்லை. ஜோடியா நடிச்ச கெளரி முன்ஜால் ரொம்பப் ஃப்ரண்ட்லியா பழகினாங்க அது கூட எனக்கு ஈஸியா இருந்திச்சு.
இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடிக்கிறார்களே..?
அது எனக்கு பெரிய சந்தோஷம். நான் அறிமுகமாகிற படத்துல இவ்வளவு பேர் நடிக்கிறது எனக்கு பெரிய சப்போர்ட். ஒவ்வொருத்தரும் ஒரு பெரிய திறமையை கைல வச்சிருக்கிறவங்க. நான் எல்லார்கி்ட்டேயும் ஒவ்வொன்று கத்துக்கிட்டேன் ராஜ்கிரண், வடிவேல், நாசர், சுகன்யா, சந்தானம் இப்படி.. ராஜ்கிரண் சார் பெரிய கேரக்டர்ல வர்றார். ஒவ்வொருத்தர் நடிப்பைப் பார்க்கும் போது எனக்கு பிரமிப்பா இருக்கும். இதுபற்றி அப்பா குறிப்பிடும் போது பில்டிங் புதுசு அதாவது ஹூரோ, அதனால பில்லர ஸ்ட்ராங்கா போட்டிருக்கேன் பார். அதாவது கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் சப்போர்ட்ல என்னை தூக்கி நிறுத்தியிருக்கார் இது நிஜம்தான்.
எப்படிப்பட்டவராக வர ஆசை?
படம் வரட்டும். என் நடிப்பை மக்கள் ஏற்றுக்கணும், அங்கீகரிக்கணும் இது நிச்சயம் இன்னொரு 'பன்னீர் புஷ்பங்கள்' போல இருக்கும் அப்பா மூலம் அறிமுகமாவது பற்றிச் சொல்லனும்னா ஒன்று சொல்வேன், I am so gifted. நிஜமா நான் கொடுத்துவச்சவன்தான்.