கங்கனா ரனவத்தின் காட்டில் பேய் மழை. குயின் படத்தின் தாறுமாறான வெற்றி மொத்த இந்தியாவின் பார்வையையும் அவர் மீது திருப்பியுள்ளது. இந்த வருடம் மட்டும் ரிவால்வர் ராணி உள்பட மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அரை டஜன் வாய்ப்புகள் கங்கனாவின் கால்ஷீட்டுக்காக வெயிட்டிங். அதில் ஒன்று ககானியை இயக்கிய சுஜாய் கோஸின் துர்கா ராணி சிங்.
FILE
இந்தப் படத்தின் நாயகி 14 வயது பெண் குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும். மூளை வளர்ச்சி பாதிப்படைந்த இந்த குழந்தைக்கும் தாய்க்கும் நடுவிலான உறவுதான் கதை என்கிறார்கள். இந்தப் படத்தில் 35 வயது தாயாக நடிக்க சுஜாய் கோஸ் கங்கனா ரனவத்தை கேட்டிருக்கிறார்.
படத்தின் கதையும், கேரக்டரும் பிடித்ததால் கங்கனா நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக தனது சம்மதத்தை அவர் அறிவிக்கவில்லை.
கங்கனா ரனவத் சமீபத்தில்தான் (மார்ச் 23) தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடினார். 27 வயதானவர் 14 வயதான பெண்ணின் தாயாக நடிப்பாரா?