தெலுங்கில் படங்கள் இயக்கி வந்த புரி ஜெகன்நாத் இந்தியில் இயக்கியிருக்கும் படம் புத்தா. ஹீரோ அமிதாப்பச்சன்.
இன்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அமிதாப்பச்சனை இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு. புரி ஜெகன்நாத்துக்கும் அப்படியே. தனது முதல் இந்திப் படத்திலேயே கனவு கைகூடினால்...? அந்த மகிழ்ச்சியல்தான் இருக்கிறார் புரி ஜெகன்நாத். வரும் 1ஆம் தேதி படம் வெளியாகிறது.
படம் வெளியாகும் நேரத்தில் புரி ஜெகன்நாத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது. புரி-யின் அடுத்த இந்திப் படமான பிசினஸ்மேனில் அபிஷேக்பச்சன் நடிக்கிறார்.
யுவா வெளியான போது அபிஷேக்கின் நடிப்பில் கவரப்பட்டு அவரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். அப்போது அபிஷேக் பிஸி. இப்போது புரி ஜெகன்நாத் கேட்டால் மற்றப் படங்களை தள்ளி வைத்து கால்ஷீட் தரும் நிலையில் உள்ளார். காரணம் புத்தா படம் மிரட்டலாக வந்துள்ளதாம்.
தெலுங்குப் படவுலகம் இனி புரி ஜெகன்நாத்தை மறக்கதான் வேண்டும்.