இந்தியில் இத்தாலியன் ஜாப்

புதன், 22 ஜூலை 2009 (16:57 IST)
ஹாலிவுட்டில் வெளியான இத்தாலியன் ஜாப் படத்தை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் ஆ‌க்சன் பட ப்‌ரியரென்றால் உடனே டிவிடி வாங்கி பார்த்து விடுங்கள். சுவாரஸியமான, புத்திசாலித்தனமான, விறுவிறு ஆ‌க்சன் படம்.

முதல் இத்தாலியன் ஜாப் படம் வெளியானது 1969ல். Peter Collinnson படத்தை இயக்கியிருந்தார். படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். அதே படத்தை 2003ல் மீண்டும் ஹாலிவுட்டில் எடுத்தார்கள். ஒரு மிகப் பெ‌ரிய கடத்தலில், உடனிருக்கும் நபரே டபுள் கிராஸ் செய்வது கதை. அந்த நபரை மற்றவர்கள் எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருந்தார் இயக்குனர் கே‌ரி கிரே.

இந்த இரு படங்களின் இந்தி ‌ரீமேக் உ‌ரிமையை ஸ்டுடியோ 18 வாங்கியுள்ளது. இவர்கள் தயா‌ரிப்பில் அப்பாஸ்-மஸ்தான் இயக்கும் புதிய படத்துக்காகவே இந்த உ‌ரிமை வாங்கப்பட்டிருக்கிறது.

முன்பு, டான் உள்பட பல படங்களை ஹாலிவுட்டிலிருந்து அனுமதி பெறாமலே சுட்டார்கள். தற்போது தொலை தொடர்பும், ஹாலிவுட்-பாலிவுட் தொடர்பும் அதிக‌ரித்துள்ள நிலையில் அப்படியே படங்களை காப்பி அடிக்க முடியாது என்பதால் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

டெக்னால‌ஜியால் இப்படியும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்