க‌ரீனாவின் புத்தக காதல்

சனி, 18 ஜூலை 2009 (16:25 IST)
சயிஃப் அலிகானை ஒரு நடிகராகதான் எல்லோருக்கும் தெ‌ரியும். இப்போது தயா‌ரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார். சயிஃப் ஒரு புத்தக ரசிகர் என்பது யாருக்காவது தெ‌ரியுமா?

தெ‌ரியாவிட்டால் இப்போது தெ‌ரிந்து கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பதில் சயிஃப் அலிகானுக்கு ஆர்வம். அவரது தற்போதைய காதலி க‌ரீனா கபூருக்கு புத்தகங்கள் என்றால் அலர்‌ஜி. சயிஃப்பின் புத்தக வாசிப்பின் மீது அவருக்கு வெறுப்பும் உண்டு.

இந்நிலையில் அவரது வற்புறுத்துதலுக்காக உலகப் புகழ்பெற்ற லெவன் மினிட்ஸ் புத்தகத்தை வேண்டா வெறுப்பாக படித்திருக்கிறார் க‌ரீனா. லெவன் மினிட்ஸ் அவருக்குள் பல மாற்ற‌ங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கியமாக புத்தகம் என்றால் இப்போதெல்லாம் அவர் முகத்தை திருப்பிக் கொள்வதில்லை. தேடிப் பிடித்து நல்ல புத்தகங்களை வாசிப்பதுடன் தனது நண்பர்களுக்கும் சிபா‌ரிசு செய்கிறார். புத்தகத்தைப் போல நல்ல
நண்பன் இல்லை என்று சும்மாவா சொன்னார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்