பாலிவுட்டில் ப்ளாக் ஆரம்பிக்காத நட்சத்திரங்கள் யாராவது இருக்கிறார்களா? அனேகமாக இல்லை. ப்ளாக் வைத்திருப்பவர்கள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துகிறார்களா? இதற்கும் அதே பதில், அனேகமாக இல்லை.
விதிவிலக்கு அமீர்கான். படப்பிடிப்பினால் ப்ளாக்கில் எழுத முடியாமல் போனால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ப்ளாக்கை தொடர்ச்சியாக பயன்டுத்துகிறவர் இவர். சமீபத்திய இவரது தூங்காத இரவு பற்றிய பதிவு, சுவாரஸியமானது.
படப்பிடிப்பு முடிந்து சோர்வாக அதிகாலை மூன்று மணிக்கு படுத்திருக்கிறார் அமீர்கான். படுத்த சிறிது நேரத்தில் ஏதோ கடிக்க ஆரம்பித்திருக்கிறது. சோர்வு மேலிட பொறுத்துக் கொண்டு படுத்திருக்கிறார். நேரம் போகப் போக கடியின் தீவிரமும், ஏரியாவும் அதிகரித்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் விழித்துப் பார்த்தால், படுக்கை நிறைய எறும்புகள். தனது தூக்கத்தை கெடுத்த எறும்புகள் எப்படி அங்கு வந்தன என்று அமீர்கானுக்கு எந்த ஐடியாவும் இல்லையாம்.
அமீர் நாட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க அவரது தூக்கத்தை சின்ன ஏறும்புகள் கெடுத்திருக்கின்றன. சுவாரஸியமாக இல்லை?