மலையாள கத பறயும் போள் படத்தின் இந்தி ரீ-மேக்கை ப்ரியதர்ஷன் இயக்கி வருகிறார். ஷாருக்கான் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி.
படத்தை விரைவில் வெளியிடுவதுதான் அனைவரின் நோக்கமாக இருந்தது. எல்லா திட்டங்களையும் மாற்றி விட்டது கத பறயும் போள் படத்தின் தமிழ் ரீ-மேக்கான குசேலனின் தோல்வி.
குசேலன் தோல்விக்குப் பிறகு பில்லு பார்பரில் சில காட்சிகளை ரீ- ஷூட் செய்திருக்கிறார்கள். படத்தின் நீளமும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
கத பறயும் போள், குசேலன் இரண்டும் ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஓடக் கூடிய படங்கள். ஆனால் பில்லு பார்பரின் மொத்த நேரம் 150 நிமிடங்கள் மட்டுமே.
அத்துடன் படத்தையும் அடுத்த வருடம் வெளியிடுவது என தீர்மானித்துள்ளனர்.