வியாழன், 26 ஜூன் 2008 (17:32 IST)
அமிஷா படேலின் ரசிகர்களுக்கு இது சர்க்கரை செய்தி. சிறிய இடைவெளிக்குப் பின் தோட்டா பியார் தோடா மேஜிக் படத்தில் நடிக்கிறார், அமிஷா. அதுதான் தெரியுமே என்பவர்களுக்கு, தெரியாத சேதிகள் சிலவும் இப்படத்தில் இருக்கிறது.
யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் தோடா பியார் தோடா மேஜிக்கில் கெட்ட ஆட்டம் ஒன்று போட்டிருக்கிறார் அமிஷா. ஆட்டத்தைப் பார்த்து அவரே அசந்து விட்டாராம், அவ்வளவு கவர்ச்சி!
அமிஷாவுடன் சைஃப் அலிகான், ராணிமுகர்ஜி ஆகியோர் நடித்தாலும், படத்தின் பேசுபொருள் அமிஷாவின் அந்த கெட்ட ஆட்டம்தான்.
என்னுடைய ரசிகர்கள் இதனை (ஆட்டத்தை) விரும்பி ஏற்பார்கள் என்று நம்பிக்கை (?) தெரிவித்துள்ளார் அமிஷா.
ஆகா, பாலிவுட் நெ.1 போட்டிக்கு அமிஷாவும் தயார்!