கோக் நிறுவனத்தின் (தம்ப்ஸ் அப்) விளம்பர மாடல் அக்சய் குமார். ஆனால் பேசுவதோ பெப்சியின் விளம்பர வாசகம் கிவ் மி மோர்!
சில வருடங்கள் முன்பு வரை அக்சய் குமார் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் ஒன்றரை கோடி. இப்போது ஒன்றரை கோடியில் அவர் வீட்டு நாயின் கால்ஷீட்டை கூட வாங்க முடியாது.
ஹாய் பேபி, பூல் புலையா, நமஸ்தே லண்டன் வெற்றிக்குப் பிறகு அக்சயின் சம்பளம் அதிகரித்தது. சமீபத்தில் வெளியான வெல்கம் சூப்பர் டூப்பர் ஹிட்!
தொடர்ந்து சிக்ஸராக அடிப்பதால் சம்பளத்தையும் சர்ரென்று உயர்த்தி இருபத்தைந்து கோடிக்கு கொண்டு வந்திருக்கிறார். வெளிநாடுகளில் இந்திப் படங்களுக்கான சந்தை விசாலமாகி வருவதும், பாலிவுட் நடிகர்களின் பிரமாண்ட சம்பளத்துக்கு ஒரு காரணம். ஜோதா அக்பர், வெளிநாடுகளில் மட்டும் முதல் பத்து நாட்களில் பத்து கோடிக்கு மேல் வசூலித்தது.
இருபத்தைந்து கோடி கேட்கும் அக்சய், கூடவே லாபத்தில் சரிபாதியும் வேண்டும் என்கிறார். காசு விஷயத்தில் நடிகர்கள் கரை காண்பதேயில்லை. எப்போதும் கிவ் மி மோர்தான்!