சனி, 8 மார்ச் 2008 (12:42 IST)
மீண்டும் நடிக்க வருகிறார் மனிஷா கொய்ராலா. வித்தியாசமான வேடங்கள் மட்டுமே மனிஷாவின் குறிக்கோள்.
ஒரே விதமாக நடிப்பதில் சலிப்புற்று டைரக்ஷன் கோர்ஸ் படிக்க அமெரிக்கா சென்றார் மனிஷா. அவரது அமெரிக்க நோக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.
தெலுங்கில் தயாராகும் 'நகரம்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் மனிஷா. நாயகியாக அல்ல, ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு!
ஸ்ரீநிவாஸ் இயக்கும் நகரத்தில் ஸ்ரீகாந்த், ஜெகபதிபாபு இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகி, காவேரி ஜா!
மனிஷா இரண்டாவது இன்னிங்ஸில் அடித்து தூள் கிளப்புவார் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு அவரது அயிட்டம் நம்பர் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
சினிமாவில் வேடம் முக்கியமில்லை. பணம்தான் பிரதானம். காசேதான் கடவுளடா என்பதை மெய்ப்பித்திருக்கிறார் மனிஷா.