சின்னத்திரையில் ஷாருக்கான்!

வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (14:09 IST)
ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கப்பட உள்ள குரோர்பதி நான்காவது செஷனிலும் நடுவராக இருந்து நிகழ்ச்சியை நடத்துகிறார் ஷாருக்கான்.

அதற்குமுன் இதே தொலைக்காட்சி ஒளிபரப்பும் புதிய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கிறார் ஷாருக். இந்த நிகழ்ச்சிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

அமெரிக்காவில் அமோக வரவேற்பு பெற்ற 'Are You Smarter than a 5th Grader' ரியாலிட்டி ஷோவை தழுவி ஸ்டார் பிளஸ் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது.

பெரியவர்களிடம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள படங்களிலிருந்து கேள்வி கேட்டு அவர்களின் அறிவை சோதிப்பதே இந்த ரியாலிட்டி ஷோவின் ஹைலைட்.

சினர்ஜி அட்லாப்ஸ் இந்த நிகழ்ச்சியை ஸ்டார் பிளஸ்சுக்காக தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்