பாலும் கசந்தது பழமும் கசந்ததடி

செவ்வாய், 18 மார்ச் 2014 (10:56 IST)
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. எவ்வளவு சத்தியமான வார்த்தை. சின்ன வயதிலேயே கேமராவுக்கு முன்பு நின்று புகழின் வெளிச்சத்தில் குளித்த மன்மத நடிகருக்கு இப்போது சினிமாவே பிடிக்கவில்லையாம்.

சமீபத்தில் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியவர், சினிமாவே பிடிக்கலை, சினிமாவுக்கு வெளியே ஏதாவது செய்யணும் என்ற தனது விருப்பத்தை வெளியிட்டார்.

சினிமாவை சுவாசித்து சினிமாவை சாப்பிட்டு, சினிமாவில் தூங்கி வாழ்க்கையே சினிமாவாகிப் போனதால் ஏற்பட்ட வெறுப்பா இல்லை சினிமாவினால் உருவான காதல்கள் இரண்டும் டமாலானதால் ஏற்பட்ட வெறுப்பா.

எதுவாக இருந்தாலும் நடிகருக்கு சினிமா கசந்துவிட்டது என்பது நிதர்சனம்.

வெப்துனியாவைப் படிக்கவும்