சேனாதிபதியின் ஆசை

வியாழன், 23 ஜூன் 2011 (13:26 IST)
சேனாதிபதியின் பாடிகா‌ர்ட் படம் சீனாவில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சீ‌ரியஸான இந்தப் படத்தை ஏதோ ‌ஜி‌ம் கே‌ரி படம் போல் சி‌ரித்து ரசித்தனர் வெளிநாட்டினர். நம்ம படத்துக்கு இவ்ளோ ரெஸ்பான்சா? அதிர்ந்து போனார் சேனாதிபதி.
WD

சப்பை மூக்கு தேசத்தில் தனது படத்துக்கு மார்க்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இனி நடிக்கப் போகும் படங்களில் புது ஷரத் ஒன்றை இணைக்கப் போகிறாராம். அதாவது படத்தை கண்டிப்பாக சீனாவில் திரையிட வேண்டும்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாவிட்டாலும் வானம் கீறி வைகுண்டம் போயாக வேண்டும். கடவுளே...

வெப்துனியாவைப் படிக்கவும்