வியாழன், 26 ஜூன் 2008 (20:24 IST)
இடக்கு மடக்காகப் படம் பண்ணுகிறவருக்கு முரட்டு மீசைக் கவிஞரின் பெயர் கொண்ட நடிகையிடம் மையல். இருவரும் சேர்ந்து நடித்தபோது பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டார்களாம்.
படம் முடிந்த பிறகும் இடக்கு மடக்கிற்கு நடிகையின் அன்பு அவ்வப்போது தேவைப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் தாலிகட்டி நடிகையை நிரந்தரமாகத் தன்னுடன் வைத்துக்கொள்ளவும் விரும்பியிருக்கிறார். நடிகரின் முதல் மனைவி நிலை அறிந்த நடிகை, நடிகரின் நட்பைத் துண்டித்ததோடு திருமணம் செய்து செட்டிலாகவும் தீர்மானித்துள்ளார்.