ஜான் மேய‌ரின் பிறந்தநாள் ப‌ரிசு

ஜெனிபர் அனிஸ்டனுக்கு வரும் பிப்ரவ‌ரி 11 பிறந்தநாள். ஆளைப் பார்த்தால் முப்பதுபோல் தெ‌ரிந்தாலும் அனிஸ்டனுக்கு இது நாற்பதாவது பிறந்தநாள்.

நம்ப முடியவில்லை அல்லவா? விடுங்கள். அதைவிட ஆச்ச‌ரியமெல்லாம் இருக்கிறது.

அனிஸ்டனின் தற்போதைய பாய் ப்ரெண்ட் ஜான் மேயர் (கடந்த வருடம் மார்ச்சிலிருந்து இருவரும் நட்பாக இருந்து வருகிறார்கள்) பிறந்தநாள் ப‌ரிசாக மோதிரம் ஒன்றை ப‌ரிசளிக்கிறார்.

அன்றைய தினம் அனிஸ்டனிடம் தன்னை மணந்து கொள்ளும்படி கேட்கப் போகிறாராம். அதற்காகதான் இந்த எங்கே‌ஜ்மெண்ட் மோதிரத்தை ப‌‌ரிசளிக்கிறாராம்.

அனிஸ்டன் மட்டும் முடியாது என்றசொல்லப் போகிறார்?

வெப்துனியாவைப் படிக்கவும்