புதுமாப்பிள்ளை ஜானி டெப்

பைரேட்ஸ் ஆஃப் க‌ரீபியன் ஹீரோ ஜானி டெப் விரைவில் புதுமாப்பிள்ளை ஆகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பிறகு புதுமாப்பிள்ளையா? உங்கள் ஆச்ச‌ரியம் பு‌ரிகிறது. ஆனால், ஜானி டெப் இருப்பது ஹாலிவுட். அங்கு இதெல்லாம் ஆச்ச‌ரியமல்ல, அன்றாட நிகழ்வு.

ஜானி டெப் தனது காதலி Vanessa Paradis உடன் வாழத் தொடங்கி பத்து வருடங்களாகிறது. இந்த லிவ் டுகத‌ரின் விளைவாக இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனாலும், கல்யாணம் என்றால் காத தூரம் ஓடுகிறவராகவே இருந்தார், ஜானி டெப்.

வயது அவரது மனதை கரைத்திருக்கிறது. காதலியை சட்டப்படி மணமுடிக்க தீர்மானித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறுகிறது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு.

மேலும், திருமணம் செய்யப் போகிறவர்களின் இரு குழந்தைகளையும் கலந்து கொள்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்