கிளின்ட் ஈஸ்ட்வுட் படத்தில் ஜோலி

குழந்தை பிறந்தால் 3 மாதம் விடுப்பு எடுத்து கொள்வதெல்லாம் சாதாரண பெண்கள்தான். ஏ‌ஞ்சலினா ஜோலி குழந்தை பிறந்ததும் நடிக்க வந்துவிட்டார். இவர் புதிதாக நடிக்க இருப்பது ஹாலிவுட்டின் மலைகளில் ஒன்றான கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கும் படத்தில்.

சேன்சலிங் என தனது படத்துக்கு பெயர் வைத்துள்ளார் ஈஸ்ட்வுட். ஈஸ்ட்வுட் இயக்கத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார் ஜோலி.

ஜோலியை பற்றி இன்னொரு சுவாரஸியமான தகவல். இவர் தான் நடித்த எந்தப் படத்தையும் திரையரங்கில் பார்க்க மாட்டாராம். சமீபத்தில் வெளியான வான்டட் படத்தையும் பார்க்கவில்லையாம் (இந்தப் படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்தார் ஜோலி).

ஜோலிக்கு கூச்சம் அதிகம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்