மாட் டாமன் - மீண்டும் தந்தை!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:51 IST)
பார்ன் சீரிஸின் நாயகன் மாட் டாமன் மீண்டும் தந்தையாகியிருக்கிறார். அவரது மனைவி லூஸியானாவுக்கு இது மூன்றாவது குழந்தை.

டாமன் லூஸியானாவுடன் காதல் வயப்பட்டது 2003ல். இரண்டு வருட டேட்டிங்கிற்குப் பிறகு 2005ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

லூஸியானாவுக்கு இந்த திருமணத்திற்கு முன்பே ஒரு பெண் குழந்தை உண்டு. டாமனுடன் திருமணம் முடிந்த பிறகு இப்போது பிறந்திருப்பது இரண்டாவது குழந்தை. மூன்றுமே பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

லூஸியானாவுக்கு ஒரு ஆசை. கணவனுடன் கொஞ்ச நாள் தனியாக படப்பிடிப்பின் தொந்தரவு இன்றி பொழுதை கழிக்க வேண்டும். டாமனும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். பாசக்கார கணவன்தான்!

வெப்துனியாவைப் படிக்கவும்