ஹாலிவுட்டுக்கு கரன்சி சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்!
வியாழன், 22 மே 2008 (16:55 IST)
காலம் மாறிவிட்டது. ஹாலிவுட்டுக்கே கரன்சி சப்ளை செய்கிறது இந்திய நிறுவனம்.
இந்தியாவில் ஐம்பது கோடியில் ஒரு படத்தை தயாரித்தலே, படம் தப்பிப் பிழைக்குமா என்று பட்டிமன்றம் நடக்கும். நம்முடைய சினிமா வர்த்தகத்தின் அளவு அப்படி. சர்வசாதாரணமாக ஐநூறு ஆயிரம் கோடிகளில் படம் தயாராகும் இடம் ஹாலிவுட். அங்குள்ளவர்களுக்கே பைனான்ஸ் பம்ப் பண்ணப் போகிறார் அனில் அம்பானி.
அட்லாப்ஸ் என்ற பெயரில் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் அனில் அம்பானி நிறுவனத்தின் சர்வதேச பெயர், ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மெண்ட் (RBE). சர்வதேச அளவில் சினிமா வர்த்தகம் என்பது இதன் நோக்கம்.
முதல் கட்டமாக எட்டு ஹாலிவுட் நிறுவனங்களுக்கு பணம் பைனான்ஸ் செய்கிறது இந்நிறுவனம். ஒரு வகையில் கூட்டுத் தயாரிப்பு. இந்த எட்டு நிறுவனங்களில் நிக்கோலஸ் கேஜ், டாம் ஹங்க்ஸ், ஜிம் கேரி, பிராபிட், ஜார்ஜ் குளூனி போன்ற முன்னணி ஹாலிவுட் நிறுவனங்களும் அடக்கம்.
விரைவில் வார்னர் பிரதர் ஸுக்கும் அம்பானி பிரதர்ஸ் பணம் பட்டுவாடா செய்யும் நிலை வரலாம்!