புரூஸ் வில்லிஸின் ஒயின் பார்!

திங்கள், 31 மார்ச் 2008 (16:25 IST)
நடிக்கும்போதே சம்பாதிக்கும் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்கிறார்கள் நடிகர்கள். ஹாலிவுட்டின் தி பாஸ் புரூஸ் வில்லிஸும் இதற்கு விதிவிலக்கல்ல.

1991-லேயே வில்லிஸ் ஹோட்டல் தொழிலை தொடங்கியவர். சமீபத்தில் தனது முதல் ஒயின் பாரை ஓபன் செய்து அமெரிக்க குடிமகன்களை குஷிப்படுத்தினார்.

நியூயார்க்கின் புகழ்பெற்ற போவரி ஒயின் கம்பெனியில் புரூஸ் வில்லிசும் ஒரு பார்ட்னர். இதன் கிளையொன்றை ஈஸ்ட் வில்லேஜில் திறந்தார் வில்லிஸ்.

பார் திறந்ததோடு சில பெக்குகளை உள்ளே தள்ளி, விற்பனையையும் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வில்லிஸின் ஹாலிவுட் நண்பர்களும் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்