ஊருக்கு நூறு பேர் இருந்தாலும் உளவாளி என்றால் அது இயான் ஃபிளமிங் உருவாக்கிய 007 ஜேம்ஸ்பாண்ட்தான். 22வது ஜேம்ஸ்பாண்ட் படமாக உருவாகியிருக்கிறது குவாண்டம் ஆஃப் சொலாஸ்.
webdunia photo
FILE
முந்தைய ஜேம்ஸ்பாண்ட் படமான கேசினோ ராயலின் ஹீரோ டேனியல் க்ரேக்தான் இதிலும் ஜேம்ஸ்பாண்ட். 22 படத்தில் பலரும் ஜேம்ஸ்பாண்டாக நடித்திருந்தாலும், டாப் ரேங்கில் வருகிறவர்கள் ஷான் கானரியும், பியர்ஸ் பிராஸ்னனும்தான்.
டேனியல் க்ரேக்கிற்கு ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பில்லை. என்றாலும், க்ரேக் கடலிலிருந்து உள்ளாடை மட்டும் அணிந்தபடி வெளிவரும் காட்சி இன்றும் பெரும்பாலான பெண்களின் இதய ஸ்கிரீன் சேவரில் உண்டு.
நவம்பர் மாதம் குவாண்டம் ஆஃப் சொலாஸ் வெளியாகிறது. இதிலாவது க்ரேக், ரசிகர்கள் மனங்களை வெற்றி கொள்வாரா?