உலக அளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக். இரண்டாமிடம் டோல்கின் எழுதிய கதையான லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்.
1,060,332,628 டாலர்களுடன் இந்தப் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்துள்ள படம் பைரேட் ஆஃப் கரீபியன் டெட் மேன்ஸ் செஸ்ட்!
கடற்கொள்ளையர்களின் கதையான இப்படம் கரீபியன் சீரிஸில் வெளிவந்த இரண்டாவது படம். சீரிஸின் மூன்றாவது படம் பைரேட் ஆஃப் கரீபியன் அட் வேர்ல்ட்ஸ் எண்ட். சென்ற வருடம் ரிலீஸாகி, மேலே உள்ள பட்டியலில் ஐந்தாமிடம் பிடித்தது.
மூன்று சீரிஸிலும் ஜானி டெப்தான் ஹீரோ. இவரது கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரம் திரைப்பட ரசிகர்களிடையே பிரபலமானது. அட் வேர்ல்ட்ஸ் எண்ட்டுடன் கரீபியன் சீலிஸை முடித்துக் கொள்வதாக வால்ட் டிஸ்னி அறிவித்திருக்கிறது.
ஆனால், கரீபியன் டாலர் முட்டை வாத்து. அதனை மூன்று முட்டைகளுடன் அறுத்துவிட டிஸ்னி நிறுவனம் முட்டாளில்லையே! இதோ நான்காவது படத்துக்கான வேலைகளை வால்ட் டிஸ்னி தொடங்கியுள்ளது. ஜானி டெப்பே இதிலும் ஹீரோ.