ஏஞ்சலினா ஜோலி, ஹாலிவுட்டின் ஏஞ்சல்! இவர் அமெரிக்க அரசாங்கத்திடம் இருநூற்று அறுபத்தியொன்று மில்லியன் டாலர்கள் கேட்கிறார். ஏதாவது படத்தில் நடிக்கவா என்று நினைக்காதீர்கள். ஜோலி கேட்பது ஈராக் அகதிகளின் மறுவாழ்வுக்கு!
யுனைடட் நேஷன்ஸ் ஹை கமிஷனர் ·பார் ரி·ப்யூஜஸின் நல்லெண்ண தூதுவராக உள்ளார் ஏஞ்சலினா ஜோலி. சில வாரங்கள் முன்புதான் ஜோலி ஈராக்கின் தலைநகர் பாக்தாத் சென்று வந்தார்.
ஈராக்கிலுள்ள அகதிகளின் மறுவாழ்வுக்கு UNHLR 261 மில்லியன் டாலர்களை கோரியுள்ளது. அமெரிக்க அரசுக்கு பணத்தைத் தர தயக்கம்.
பத்திரிக்கையொன்றில் இதனை குறிப்பிட்ட ஜோலி, ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் ஒரு நாள் செலவை விட இந்தத் தொகை குறைவு என்று கூறியுள்ளார்.
ஜோலியின் இந்த கோரிக்கைக்கு அமெரிக்க அரசு செவி சாய்க்குமா? ஈராக் அகதிகளின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது அது.