அதிபர் வேட்பாளர் வேடத்தில் வில் ஸ்மித்!

சனி, 1 மார்ச் 2008 (19:51 IST)
அமெரிக்காவுக்கும், நமக்கும் நிறைய ஒற்றுமைகள். குறிப்பாக சினிமா மற்றும் அரசியலில். இங்கு போலவே அமெரிக்காவிலும் சினிமா பிரபலங்களுக்கு அரசியலில் நல்ல செல்வாக்கு. ரீகன், அர்னால்டு ஸ்வாஷ்நேகர் இருவரும் உதாரணங்கள்.

நடிகர் வில் ஸ்மித்துக்கு அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக வேண்டும் என்று ஆசை. ஆசைதானே தவிர நம்மூர் நடிகர்கள் மாதிரி அதிரடியாக கட்சியெல்லாம் ஆரம்பிக்கவில்லை. இந்தக் கறுப்பு நடிகரின் விருப்பம் விரைவில் நிறைவேறும் போலிருக்கிறது.

webdunia photoFILE
டெமாக்ரடிக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பராக் ஒபாமா கறுப்பினத்தவர். இவர் அதிபராக அதிக சாத்தியங்கள் உள்ளது. ஒபாமாவைப் பற்றி ஹாலிவுட்டில் ஒரு படம் தயாராகிறது. இதில் தனது வேடத்தில் நடிக்க ஒபாமா தேர்வு செய்திருப்பது வில் ஸ்மித்தை.

ஒபாமா வில் ஸ்மித்தைப் பார்த்து தனது விருப்பத்தைக் கூறி அவரது சம்மதத்தையும் வாங்கிவிட்டார். ஒபாமா தேர்தலில் ஜெயித்து அதிபரானால், அவரைப் பற்றிய படத்தில் நடிக்கும் வில் ஸ்மித்தும் (படத்தில்) அதிபராவார்.

ஒபாமா ஏன் தனது கேரக்டரில் நடிக்க வில் ஸ்மித்தை தேர்வு செய்தார்? இதற்கு ஒபாமா அளித்த பதில், என்னைப் போலவே ஸ்மித்துக்கும் பெரிய காதுகள்!