'ஃபாலிங் சுலோலி' பாடலுக்கு ஆஸ்கர் விருது!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (19:37 IST)
கிலென் ஹான்சார்டு, மார்க்கெட்டா இர்க்லோவா இணைந்து எழுதிய 'ஃபாலிங் சுலோலி' என்ற ஆங்கில பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த கலை இயக்குநர் விருது 'ஸ்வீனய் டோட் தி டிமான் பார்பர் ஆஃப் பிலீட் ஸ்டிரீட்' என்ற படத்திற்காக டென்டி பெர்ரிட்டி, பிரான்செஸ்கா லோ ஸ்கியாவோ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவாளர் விருது 'தேர் வில் பி பிளட்' படத்திற்காக ராபர்ட் எல்ஸ்விட்டுக்கும், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது 'எலிசபெத்' படத்திற்காக அலெக்ஸாண்டிரியா பயரினுக்கும் கிடைத்துள்ளது.

சிறந்த படத்தொகுப்பாளர் விருது 'தி போர்ன் அல்டிமே‌ட்ட‌ம்' படத்திற்காக கிரிஸ்டோபர் ரோஸ்க்கும், சிறந்த அலங்கார நிபுணர் விருது 'லா விய் என் ரோஸ்' படத்திற்காக டிட்டியர் லாவரினேவுக்கும் கிடைத்துள்ளது.

சிறந்த பாடலாசிரியர் விருது 'ஒன்ஸ்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஃபாலிங் சுலோலி' என்ற பாடலை இணைந்து எழுதிய கிலென் ஹான்சார்டு, மார்க்கெட்டா இர்க்லோவா ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

'தி போர்ன் அல்டிமே‌ட்ட‌ம்' படத்திற்க்காக சிறந்த ஒலித் தொகுப்பாளர் விருது கரேன் பேக்கர் லான்டெர்ஸ், பெர் ஹால்பெர்க் ஆகியோருக்கும், சிறந்த ஒலி கலவையாளர் விருது ஸ்காட் மில்லன், டேவிட் பார்க்கர், கிரிக் பிரான்சிஸ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்